கரோனா தொற்றைத் தடுப்பதில் உலக மகா நிபுணர் பிரதமர் மோடி படுதோல்வி அடைந்திருப்பது ஏன்?

 தி.மு.. தலைவர் தளபதி  மு..ஸ்டாலின் கேள்வி


சென்னை, ஏப்.22  தடுப்பூசி விரயமா வதைத் தடுத்தல், ரெம்டெசிவர் மருந்துகள், ஆக்சிஜன் தட்டுப்பாடின்றிப் பார்த்துக் கொள்ளுதல், கரோனா தொற்று ஏற்பட்ட வுடன் ஆரம்பக் கட்டத்திலேயே சிகிச்சை கிடைக்கச் செய்தல் ஆகிய நடவடிக்கை களைத் தமிழக அரசு போர்க்கால அடிப் படையில் எடுத்திட வேண்டும்" என தி.மு.. தலைவர் தளபதி மு..ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நிர்வாகத்தில் உலக மகா நிபுணர் என்று பிரச்சாரம் செய்யப்பட்ட பிரதமர்  நரேந்திர மோடி அவர்கள் கரோனா தொற்றைத் தடுப்பதில் இப்படிப் படுதோல்வி அடைந்தி ருப்பது ஏன்? எனவும் அவர் கேள்வி எழுப் பியுள்ளார். அவரது அறிக்கை வருமாறு:

தடுப்பூசிகளை வீணடித்துள்ள மாநிலங் களில் தமிழ்நாடு முதல் மாநிலம் என்ற அவல நிலையை .தி.மு.. அரசு உரு வாக்கியிருப்பதும், நாடு முழுவதும் ஆக்சி ஜன் தட்டுப்பாடு நிலவுகின்ற சூழலில் 9300 மெட்ரிக் டன் ஆக்சிஜனை வெளிநாடு களுக்கு  மத்திய அரசு ஏற்றுமதி செய்திருப் பதும் பேரதிர்ச்சியளிக்கிறது.

மிகுந்த வேதனையளிக்கிறது

இதுபோதாது எனத் தமிழகத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடுள்ள நேரத்தில் - மாநிலத்திலிருந்து 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தமிழக அரசுக்கே தெரியாமல் மத்திய அரசு டிரான்ஸ்பர் செய்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

அண்டை மாநில சகோதரர்களும் நம் சகோதரர்களே என்றாலும் - தமிழகத்தில் ஆக்சிஜன் நிலவரம் எப்படியிருக்கிறது என்ற அடிப்படைக் கேள்வியைக் கூட இங்குள்ள தலைமைச் செயலாளரிடமோ அல்லது காபந்து சர்க்காரிடமோ கேட்டுத் தெரிந்து கொள்ள மத்திய அரசுக்கு மன மில்லை. கரோனா நோய்த்தொற்று மேலாண் மையில் எந்தவித வெளிப்படைத் தன்மை யும் இல்லாமல் மத்திய பா... அரசு திணறுவது மட்டுமின்றி - மாநில அரசுகளை கிள்ளுக்கீரைகளாக நினைக் கும் போக்குடன் நடந்து கொள்வது கெடு வாய்ப்பானதாகும்.

பா... அரசின் நிர்வாக அலட்சியம்

நேற்றுவரை ஆக்சிஜன் கையிருப்பு இருக்கிறது என்று கூறி வந்த மத்திய  பா... அரசு, இப்போது 50 ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்சிஜனை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட இருப்பதாக வரும் செய்தி களுக்குக் காரணம் - மத்திய பா... அரசின் நிர்வாக அலட்சியமா அல்லது நிர்வாக தோல்வியா? தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலத் தேர்தல்கள் மட்டுமே பிரதமர் நரேந்திர மோடியின் கண்களுக்குத் தெரிந்ததா - கரோனாவில் செத்துமடியும் மக்களின் உயிர் - கொத்துக் கொத்தாகப் பாதிக்கப்படும் மக்கள் அவருக்கு முக்கியமாகத் தெரியவில்லையா என்ற கேள்வி எழுகிறது. நிர்வாகத்தில் உலக மகா நிபுணர் என்று பிரச்சாரம் செய்து கொண்டு வரப்பட்ட பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் கரோனா தொற்றைத் தடுப்பதில் இப்படிப் படுதோல்வி அடைந்தி ருப்பது ஏன்?

.தி.மு.. அரசின் அலட்சியம்

தற்போது தமிழகம் முழுவதும் கடும் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது. இத்தகைய நெருக்கடி மிகுந்த சூழலில், நாடு முழுவதும் வீணாகியுள்ள மொத்தம் 44 லட்சம் தடுப்பூசிகளில் தமிழ்நாட்டில் மட்டும் 12.10 விழுக்காடு தடுப்பூசிகள் விரயமாக்கப் பட்டுள்ளது என்பது ரத்தக் கண்ணீர் வர வைக்கிறது. அனைவரின் உயிர்காக்கும் தடுப்பூசி  இவ்வாறு மக்களுக்குப் பயன் படாமல் வீணடிக்கப்பட்டுள்ளதும் - அதற் குத் தமிழக அரசு சொல்லும் காரணமும் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. கரோனா முதல் அலை போல் - இரண்டாவது அலை யிலும் .தி.மு.. அரசின் இவ்வளவு அலட் சியம் மிகுந்த செயல்பாடு கண்டனத்திற் குரியது. எனவே, தடுப்பூசி விரயம் ஆவதை தடுப்பது, ஆரம்பச் சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து தனியார், அரசு மருத்துவமனைகளிலும் கரோனா தொற்று சிகிச்சை அளிப்பது, ரெம்டெசிவர் மருந்து, ஆக்சிஜன் உள்ளிட்ட உயிர்காக்கத் தேவை யானவை தட்டுப்பாடு இல்லாமல் - எங்கும் போதிய அளவில்  கிடைத்திடச் செய்வது ஆகிய அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால வேகத்தில் தமிழக அரசு எடுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள் கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Comments