கரூர் மாவட்ட திராவிடர் கழகத் துணைத் தலைவர் விபத்தில் பாதிப்பு: தமிழர் தலைவர் நலம் விசாரித்தார்


 கரூர்,ஏப்10- கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையத்தில் வசித்துவரும் டி.டி.குமார் மாவட்ட துணைத் தலைவர்  கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் விபத்துக்குள்ளானார்வலது காலில் பெரும் பாதிப்புஏற்பட்டது. இந்த தகவல் அறிந்து கரூர் மாவட்ட திராவிடர் கழக மாவட்ட தலைவர் ஆசிரியர் குமாரசாமி, மாவட்ட செயலாளர் மாரிமுத்து, இளைஞரணி செயலாளர் ஜெகநாதன் ஆகியோர் நேரில் சென்று அவரது குடும்பத்தாரிடமும் அவரிடமும் நலம் விசாரித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கழகத் தலைவர் தமிழர் தலைவர் அவர்கள் தொலைபேசிமூலம்  தொடர்புகொண்டு விபத்தில் பாதிக்கப்பட்ட டி.டி.குமாரிடம் நலம் விசாரித்து தேவையான உதவிகளை செய்வதாக ஆறுதல் கூறினார்தவுட்டு பாளையத்தில்  டி.டி.குமார் கழகத்தின் கிளையை நிறுவி தந்தை பெரியார் அவர்களை பலமுறை அழைத்து கூட்டம் நடத்தியவர் ஆவார். கழகம் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்தில் தனியாக காரை முதுகில் இழுத்துச் சென்றவர். மற்றும் அரிவாள் மீது ஏறி நின்று மூடநம்பிக்கையை முறியடிக்கும் பகுத்தறிவு செயல் விளக்கங்களை நிகழ்த்தியவர்.   

Comments