ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிகல், சென்னை:

·             நெல்லையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தேர்தல் பரப்புரையை, அதிமுகவின் பாளையங்கோட்டை, ராதாபுரம் வேட்பாளர்கள் புறக்கணித்தனர்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·             அய்ந்து மாநில தேர்தல் முடிவுகள் மோடியின் மக்கள் விரோத ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என காங்கிரஸ் தலைவர் .சிதம்பரம் கூறியுள்ளார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·             விசாகப்பட்டினம் உருக்கு ஆலை உள்ளிட்ட தேசிய சொத்துக்களை விற்க மோடி அரசு எடுத்த முடிவுக்கு எதிராக போராட்டத்தை முடுக்கிவிடுமாறு தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவர் வி.அனுமந்த ராவ் அழைப்பு விடுத்தார்.

- குடந்தை கருணா, 4.4.2021 

Comments