ஏட்டுத் திக்குகளிலிருந்து...

 டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:

·     இந்தியாவில் ஏற்பட்டுள்ள வேலையின்மை அதிகரிப்பு, பொருளாதார வீழ்ச்சி இத்துடன் மனித உரிமை மீறலும் இந்தியா பற்றி ஏனைய உலக நாடுகள் ஏற்கெனவே கொண்டிருந்த உயர்வான பார்வை மாறி வருகிறது என மூத்த எழுத்தாளர் ஆகார் படேல் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     தலைநகர் டில்லியின் சுகாதாரக் கட்டமைப்பு நொறுங்கி வருகிறது. ஆக்சிஜன் விநியோகத்தை அதிகரிக்க டில்லி அரசின் வேண்டுகோளை உடன் பரிசீலிக்க மத்திய அரசுக்கு டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     உத்தரப்பிரதேசத்தில் யோகி தலைமையிலான பாஜக அரசு நிர்வாகம் மீதான கட்டுப்பாட்டை இழந்து விட்டதால்தான், கரோனா தொற்று அதிகரித்து விட்டது என சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.

தி டெலிகிராப்:

·     மேற்கு வங்கத்தில் ரவீந்திரநாத் தாகூர் முதல் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் வரை உருவாக்கிய அமைதியான வழிமுறைகளுக்கு மாறாக தற்போதைய தேர்தலில் மதரீதியான வேற்றுமைகள் கூர்மைப்படுத்தப்படுகிறது என பொருளாதார வல்லுநரும் நோபல் பரிசு பெற்றவருமான அமர்த்தியா சென் குறிப்பிட்டுள்ளார்.

·     'மோடி பதவி விலகு' என்ற ஹேஷ்டேக் திங்களன்று நாடு முழுவதும் சுட்டுரையில் வெளியானது. இதற்கு மாறாக பாஜக தரப்பில் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் அமைதி காத்தனர்.

- குடந்தை கருணா

20.4.2021

Comments