ஏட்டுத் திக்குகளிலிருந்து...

 டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:

· மோடி அரசு கரோனா தடுப்பு நடவடிக்கையிலும், பாதிக்கப்பட்டோருக்கு மருந்துகள் கிடைப்பதற்கு வழிவகை செய்வதிலும் மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளது. மோடி துரித முடிவு எடுப்பவர் என்பது பற்றிய பிம்பம் பொய் யானது என முன்னாள் அரசு அதிகாரி பவன் கே.வர்மா குறிப் பிட்டுள்ளார்.

டெக்கான் கிரானிகல், சென்னை:

· கால்நடை சம்பந்தப்பட்ட 4ஆவது வழக்கிலும் ஜார்கண்ட் நீதிமன்றம் லாலு பிரசாத் யாதவிற்கு பிணை வழங்கியது.

·     இந்தியாவில் மனித உரிமை மீறல் அதிகரித்துள்ளதாகவும், குடியுரிமை திருத்த மசோதா முஸ்லீம்களுக்கு எதிரானது என்றும், மக்களை பிளவுபடுத்தும் செயல் என்றும் அய்ரோப்பிய அமைப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     கரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வரும் நிலையில், மேற்கு வங்கத்தில் அடுத்து வர உள்ள  தேர்தலை ஒரே நாளில் நடத்த தேர்தல் ஆணையம் ஏன் மறுக்கிறது? பிரதமரும், உள்துறை அமைச்சரும் அதிக நாட்கள் பிரச்சாரத்தில் ஈடுபட வசதியாகவே அம்மாநிலத்தில் எட்டு கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது என்ற அய்யமும் எழுந்துள்ளது என காங்கிரஸ் தலைவர் .சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

தி டெலிகிராப்:

·     மேற்கு வங்க தேர்தல் பரப்புரையில் அசான்சோலில் 2018-இல் நடைபெற்ற கலவரத்தை பிரதமர் மோடி நினைவுபடுத்திப் பேசினார். அவர் குற்றம் சாட்டும் அப்போதைய திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் தற்போது பாஜகவின் வேட்பாளராக நிற்கிறார் என்பது அவருக்கு தெரியாது போலும்.

·     பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியான வாரணாசியில் உள்ள மயானக் கூடங்கள் கோவிட் தொற்றால் இறந்தவர்களின் உடல் களால் நிரம்பி வழிகின்றன. கங்கை வழியாக அரிச்சந்திர காட் படிக்கட்டுகளில் உடல்கள் எரிப்பதற்காக வரிசையில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

- குடந்தை கருணா

18.4.2021

Comments