ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி: மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலில் முதல் அமைச்சர் மம்தா பிரச்சாரம் செய்ய ஒரு நாள் தடை விதித்திருக்கும் நடவடிக்கை அம்மாநிலத்தில் மட்டுமன்றி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதே?

- சு.மோகன்ராஜ், தாம்பரம்.

பதில்: மேற்கு வங்கத்தில் பா... ஆட்சியை நிறுவ தேர்தல் ஆணையத்தின் மறைமுக ஒத்துழைப்போடு மோடியும், அமித்ஷாவும், பா...வினரும் ஒற்றைக்காலில் நிற்கின்றனர்.

               ஆனால், இவர்களது செயல்களே இவர்களது தோல்வியை வேகப்படுத்தும் போலிருக்கிறது!

               மோடி வித்தை' வங்கத்தில் எடுபடாது என்கிறார் முதல்வர் மம்தா! வங்கம் காவி மயமாகுமா? - நேரிய வழியில் தேர்தல் முடிவுகள் அமைந்திடுமா என்பதுமில்லியன் டாலர்' கேள்வி!

கேள்வி:  நாட்டில் கொடிய கரோனா நிலவும் சூழலில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மத்திய - மாநில அரசுகளின்கடமை அல்லவா?

 - பெ. அங்காளம்மாள், திருவொற்றியூர்.

பதில்:  மாநில அரசுகளுக்கு முழு அதிகாரம் வழங்கப்படாததால் விரைந்து செய்ய முடியாத ஓர் இடர்ப்பாடு மாநிலங்களிடையே உள்ளது என்பதே யதார்த்தம்.

கேள்வி: பெரியார் நூற்றாண்டு விழாவையொட்டி அரசு அமைத்த குழுவிற்காக முன்னாள் துணை வேந்தர் நெ.து. சுந்தரவடிவேலு அவர்கள் எழுதப்பட்டதந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு' எனும் நூல் இன்று வரை வெளிவராமல் போனதற்கு என்ன காரணம்?

 - இல. சீதாபதி, மேற்கு தாம்பரம்.

பதில்: அதற்காகவே அவர் தனியே நூல் எழுதி பல பதிப்புகள் வந்துவிட்ட நிலையை நமக்கு உருவாக்கித் தந்துள்ளாரே! (புரட்சியாளர் பெரியார்)

கேள்வி:  சென்னை மண்டல வானிலை அறிக்கை யில் ஆங்கிலத்தைத் தவிர்த்து அதற்கு பதிலாக இந்தி திணிக்கப்பட்டுள்ளதே - இதற்கு என்ன முடிவு?

- பெ.கண்ணன், மேல்மருவத்தூர்.

பதில்: தமிழக .தி.முக. அரசின் அடிமைச் சாசனம் (டில்லிக்கு) காரணம்.

கேள்வி:  கடும் கரோனாவால் மக்கள் அல்லல் படும்அவல நிலையில், உத்தரகாண்ட் மாநிலம் அரித்து வாரில் கும்பமேளா எனும் பெயரில் லட்சக்கணக்கான மக்கள் ஒன்றாக கூடுவதையும், புனித நீராடுவதையும் அம்மாநில அரசு தடைசெய்ய முன்வராதது ஏன்?

- கண்ணாயிரம், காஞ்சிபுரம்.

பதில்: அரசமைப்புச் சட்டக் கடமை தவறிய அரசின் அலட்சியமே இது. அரசமைப்பு சட்டத்தின் 25, 26ஆவது பிரிவுப்படி சுகாதாரக்கேடு ஏற்படுமாயின் மத உரிமை பறிக்கப்படலாம் என்று உள்ளதை ஏனோ காவி அரசுகள் கவனியாமல் பக்தி மூடத்தனத்தின் போதையில் உள்ளதால் இந்த வேதனையான நிலை!

கேள்வி: ஆசிரியர் தேர்வு வாரிய முன்னாள் தலைவர்களாக இருந்த 8 அய்..எஸ் அதிகாரிகளை கட்டாய ஓய்வில் அனுப்ப மாநில தகவல் ஆணையம் பரிந்துரைத்துள்ளதே - இதனால் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு யார் பொறுப்பு?,

- எஸ். பத்ரா, வந்தவாசி.

பதில்: ஆட்சியாளரின் பங்கை அலட்சியப்படுத்திட முடியாது; கூடாது. ஆசிரியர் தேர்வு வாரியம் முழுவதும் புதிய அரசால் பெரும் மாற்றத்திற்கு ஆளாக்கப்படுதல் அவசியம்!

கேள்வி:  பெரியார் .வெ.ரா. நெடுஞ்சாலை எனும் பெயரை மாற்றத் துடிக்கும் இன எதிரிகளால், இன்று பெரியார் பற்றியே பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாம் இன எதிரிகளுக்கு நன்றி சொல்லலாம்தானே?

- எஸ்.முனியம்மாள், வெங்கோடு.

பதில்: உங்கள் கேள்வியிலே உள்ள பதிலுக்கு எமது நன்றி!

கேள்வி: அய்ந்தாண்டு காலம் முடிந்த பிறகும் 2016ஆம் ஆண்டு தேர்தலில் ராதாபுரம் தொகுதி வேட்பாளர் அப்பாவு அவர்கள் தொடுத்த தேர்தல் வழக்கு நிலுவையில் இருப்பது நீதிமன்றங்களின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துகிறதா?

- அயன்ஸ்டின் விஜய், சோழங்குறிச்சி.

பதில்: 5 ஆண்டுதானே! வெள்ளி விழா, பொன்விழா கண்ட வழக்குகள் பல இன்னும் நீதிமன்றங்களில் உள்ளனவே!

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிஎன்பதை இன்னமும் நாம் நம்பத்தான் வேண்டுமா?

கேள்வி: வனத்துறைக்குச் சொந்தமான காடுகளை ஆக்கிரமித்து ஆசிரமம் அமைத்துக் கொண்டு, கோயில்களை அரசாங்கத்திடமிருந்து அபகரிக்க முயற்சி செய்யும் காவி சாமியாரை யாரும் கண்டிக்கவில்லையே?

- திராவிட விஷ்ணு, வீராக்கன்

பதில்: ஈஷா மய்யத்தை, தமிழக ஹிந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் - ஹிந்து சமய அறநிலையத்துறை தன் கண்காணிப்புக்குள் கொண்டு வர முயற்சிகளைத் தீவிரமாக்குவது அவசர, அவசியமானது. இதற்கான இயக்கம் வலுப்படட்டும்!

கேள்வி: ராசி பார்த்தோ அல்லது குறிப்பிட்ட எண் வேண்டுமென்றோ கேட்டு வாகன எண் வாங்குவோருக்கு கூடுதல் கட்டணம் விதிப்பதைப் போல, நல்ல நாளில் பதிவு செய்கிறோம் என்போருக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது (மூடநம்பிக்கைக்கான தண்டத் தொகை போல) அரசின் வருமானத்திற்கு நல்லதுதானே?

- மணிமேகலை, வியாசர்பாடி

பதில்: அதைவிட மூடநம்பிக்கையைப் பரப்புவது மிகவும் ஆபத்தான - மக்களை மடையர்களாக்கும் முயற்சி அல்லவா? அதை அரசே செய்யலாமா? ஒரு தவறு மற்றொரு தவறை நியாயப்படுத்திவிட முடியாது - கூடாது!

Comments