கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசியின் பயன் எப்படி?:சுகாதாரத்துறை விளக்கம்

புதுடில்லி. ஏப். 23  இந்தியாவில் கரோனா தொற்றை கட்டுப் படுத்த கோவாக் சின்,கோவி ஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப் பட்டு வருகின்றன. இந்த நிலை யில்கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி எடுத்துக்கொண்டவர் களில் ஒவ்வொரு டோஸ்-க்கு பிறகு எத்தனை பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட் டார்கள் என்ற தகவலை மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள் ளது.

கரோனா தொற்றின் 2ஆவது அலை தீவிரமாக பரவி வருகிறது. கடந்த 24 நேரத்தில் கரோனா தொற்றினால் பாதிக்கப் பட்ட வர்களின் எண்ணிக்கையானது 3 லட்சத்தை நெருங்கி யுள்ளது.

இந்தியாவில் 1,1 கோடி பேருக்கு கோவாக்சின் போடப் பட்டுள்ளது.

இதில் 93லட்சத்து 56ஆயி ரத்து 436 பேருக்கு முதல் டோஸ் மருந்தும், 2வது டோஸ் 17லட்சத்து 37ஆயிரத்து 178 பேருக்கும் போடப்பட்டுள்ளது.

இதில் கோவாக்சின் முதல டோஸ்  செலுத்தப்பட்ட 93,56, 436 பேரில், 4208 பேருக்கு அதா வது 0.04% பேருக்கு மீண்டும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும், 2ஆவது  டோஸ் செலுத்தப்பட்ட பிறகும் 695 பேருக்கு அதாவது  0.04% பேருக்கு மீண்டும் தொற்று கண்டறியப்பட்டு இருப்பதாக வும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அதேவேளையில், கோவி ஷீல்டு தடுப்பூசி முதல்டோஸ் எடுத்துக்கொண்ட 10,03,02,745 பேரில், 17,145 பேருக்கு, அதாவது 0.012 சதவிகிதம் பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப் பட்டு இருப்பதாகவும், 2ஆவது டோஸ் போட்டுக்கொண்டவர் களில் 5014 பேருக்கு அதாவது 0.03% பேருக்கு தொற்று கண்ட றியப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில் கோவாக்சின் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர் களில் 0.04சதவிகிதத்தினரும், கோவிஷீல்டு தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களில் 0.03சத விகிதத்தினரும் கரோனா தொற் றால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று இந்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Comments