எல்லை சாலை கழகத்தில் காலிப் பணியிடங்கள்

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் எல்லை சாலை கழகத்தில் ஏற்கெனவே வெளியிடப்பட்ட அறிவிப்பில் காலியிடம் அதிகரிக்கப்பட்டு, விண்ணப்பிக்கும் தேதியும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

காலியிடம்: டிராப்ட்ஸ்மேன் 43, சூப்பர்வைசர் ஸ்டோர் 11, ரேடியோ மெக்கானிக் 4, லேப் அசிஸ்டென்ட் 1, மல்டி ஸ்கில்டு வொர்க்கர் 250, ஸ்டோர்கீப்பர் டெக்னிக்கல் 318 என மொத்தம் 627 இடங்கள் உள்ளன.

வயது, கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடு கிறது. முழு விவரத்தை பார்த்து விண்ணப் பிக்கவும்.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, உடல்தகுதி தேர்வு.

உடல் தகுதி: குறைந்தது உயரம் 157 செ.மீ., எடை 50 கிலோ இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி:  Commandant GREF Centre, Dighi camp, Pune- 411 015.

விண்ணப்பக்கட்டணம்: ரூ.50. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசி நாள்: ஏற்கெனவே வெளியிட்ட அறிவிப் பில் கடைசி தேதி 5.4.2021 ஆக இருந்தது. தற்போது 5.5.2021 என நீட்டிக்கப்பட்டுள்ளது.

விபரங்களுக்கு:  www.bro.gov.in/WriteReadData/linkimages/0637400569-1.pdf


Comments