அண்ணா பல்கலை.யில் இணையவழியில் தேர்வு எழுதிய ஒரு லட்சம் பேரின் முடிவு நிறுத்திவைப்பு

சென்னை, ஏப். 15 அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இணைய வழியில் தேர்வு எழுதிய சுமார் ஒரு லட் சம் மாணவர்களின் தேர்வு முடி வுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங் களும் மூடப்பட்டன. மாண வர்களின் பாது காப்பையும், அவர்களின் கல்வியையும் கருத்தில்கொண்டு இணைய வழியில் பாடங்கள் நடத்தப் பட்டு வந்தன.

கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடத்த வேண்டிய பொறியியல் செமஸ்டர் தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் தள்ளிவைத்தது. கரேனா பாதிப்பு சற்று குறையத் தெடங்கிய நிலையில், பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு களை கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங் களில் இணையவழியில் நடத் தியது. 4 லட்சத்துக்கும் அதிக மான மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.

இந்நிலையில், பிஇ, பிடெக், மற்றும் எம்இ, எம் டெக் படிப்புகளில் முதல் ஆண்டு நீங்கலாக 2ஆம் ஆண்டு, 3ஆம் ஆண்டு மற் றும் இறுதி ஆண்டு மாணவர் களுக்கான தேர்வு முடிவு களை அண்ணா பல்கலைக் கழகம் கடந்த 11ஆம் தேதி இணையதளத்தில் வெளி யிட்டது. பலரது முடிவுகளில் தேர்வு எழுதிய பாடத்துக்கு அருகே தேர்ச்சி அல்லது தோல்வி என்று குறிப்பிடா மல், நிறுத்திவைப்பு என்பதை குறிக்கும் விதமாக கீபி  WH (With held)  என்று குறிப்பிடப்பட் டிருந்தது. இதைப் பார்த்து மாணவர்களும் பெற்றோரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் கூறிய தாவது:

கரோனா பரவல் காரண மாக பொறியியல் மாணவர்க ளுக்கு இணையவழியில் 60 மதிப்பெண்களுக்கு செமஸ் டர் தேர்வு நடத்தப்பட்டது. அதன்படி, தலா 2 மதிப் பெண்கள் கொண்ட 15 கேள்விகளும், ஒரு மதிப் பெண் கொண்ட 30 கேள்வி களும் கேட்கப்பட்டன.

தேர்வு எழுதும் மாணவர் கள் தலையை அசைக்கக் கூடாது, அறை யில் எவ்வித சத்தமும் கேட்கக் கூடாது, மாணவர்களின் அருகில் யாரும் இருக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல வழிகாட்டு நெறிமுறைகள் விதிக்கப் பட்டன. இந்த வழிகாட்டு நெறிமுறை களை சரியாக பின்பற்றாதது, தேர்வு முறைகேடாக கருதப்படும். தேர்வு எழுதிய மாணவர்கள் சம்பந்தப்பட்ட கல்லூரி தரப்பிலும், அண்ணா பல் கலைக்கழகம் தரப்பிலும் கண்காணிக்கப்பட்டனர். அந்த வகையில், சுமார் 30 ஆயிரம் மாணவர்கள் முறை கேட்டில் ஈடுபட்டதாக கரு தப்படுகிறது.

இதுதவிர, தேர்வுக் கட்ட ணம் செலுத்தாத மாண வர்கள், முறைகேட் டில் ஈடு பட்டதாக சந்தேகிக்கப்படு பவர்கள் போன்ற காரணங் களால் சுமார் ஒரு லட்சம் மாணவர்களின் தேர்வு முடிவுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அந்த மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்னும் ஒரு வாரத்துக்குள் வெளியிடப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பொறியியல் மாணவர்கள் சிலர் கூறும்பேது, லட்சக் கணக்கான மாண வர்கள் அலைபேசியில்தான் எழுதி னர். கல்லூரிகள் திறக்கப் படாததால் வீட்டில் இருந்து தான் தேர்வு எழுத வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. வீட் டில் வழக்க மான சத்தம் எழுந்தாலும் முறைகேட்டில் ஈடுபடுவதாக கருதி தேர்வு தளத்தில் எச்சரிக்கை வந்தது. கிராமப்புற மாண வர்கள் பலருக்கு தேர்வு எழுத வீட் டில் தனி அறை இருந்திருக் காது. அந்த வீட்டில் பெற் றோர் அருகே வந்தாலும் முறை கேடு எச்சரிக்கை எழுந்தது.

ஒருசில மாணவர்கள் வேண்டு மானால் முறை கேட்டில் ஈடுபட்டு இருக் கலாம். ஆனால், இவ்வளவு பெரிய எண் ணிக்கையிலான மாணவர்கள் முறை கேட்டில் ஈடுபட வாய்ப்பே கிடை

யாது.

எல்லா மாணவர்களையும் தவறாக கருதுவது மிகுந்த வேதனை அளிக்கிறது. எனவே, தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் மறு பரிசீலனை செய்ய வேண் டும் என்றனர்.

Comments