கன்னியாகுமரி பகுத்தறிவாளர் கழகம் நடத்திய திராவிடர் இயக்க வரலாறு தொடர் சொற்பொழிவு நிறைவு விழா கருத்தரங்கம்

நாகர்கோவில் பெரியார் மய்யத்தில் கன்னியாகுமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் திராவிடம்வெல்லும் சிறப்பு கருத்தரங்கம்(திராவிடர் இயக்க வரலாறு சொற்பொழிவு நிறைவு விழா)நடைபெற்றது. மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் .சிவதாணு தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.  நாகர்கோவில் மாநகர திக துணைத் தலைவர் கவிஞர் .செய்க் முகமது முன்னிலை வகித்தார்.  குமரி மாவட்ட செயலாளர் கோ.வெற்றிவேந்தன் தொடக்கவுரையாற்றினார்.  முற்போக்கு எழுத்தாளர் சங்க பொறுப்பாளர் கு.சந்திரன், முத்து வைரவன், வெங்கடேஷ், சியாமளா ஆகியோர் உரையாற்றினர்.  இராஜ குமார், சிதம்பரநாதன் மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.  மேலராமன்புதூர் கிளைக் கழக பொறுப்பாளர்  பி. கென்னடி நன்றி கூறினார்.

Comments