தேர்தல் தகராறில் இருவர் கொலை கண்டனத்திற்குரியது சட்டம் -ஒழுங்கை நிலைநாட்ட கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

 காவல்துறை தலைவருக்கு மு..ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை, ஏப்.10 அரக்கோணம் அருகே தேர்தல் மோதலில் இருவர் கொலை செய்யப்பட்டிருப்பது வேதனை அளிக்கிறது என்றும், தமிழ்நாட்டில் சட்டம்- _ ஒழுங்கை நிலைநாட்டிட காவல்துறைத் தலைவர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தளபதி மு..ஸ்டாலின் கூறியுள்ளார்.

தி.மு.. தலைவர் தளபதி மு..ஸ்டாலின் நேற்று (9.4.2021) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அரக்கோணம் அருகே தேர்தல் தகராறில் அர்ஜூனன், சூரியா ஆகிய இருவர் படுகொலை செய்யப் பட்டிருப்பது மிகுந்த வேதனையளிக் கிறது. சட்டமன்றத்தேர்தல் என்பது ஜனநாயகத்தில் நடைபெறும் ஒரு திருவிழா.

அதில் அனல் பறக்கும் பிரச்சாரங்கள் நடைபெறுவதும், ஆக்கப்பூர்வமான முறையில் கருத்து பரிமாற்றங்கள் செய்வதும் மட்டுமே ஜனநாயகத்திற்கும், பொது அமை திக்கும் வலு சேர்க்கும். இந்த நிகழ்வை பொறுத்தமட்டில் தேர் தல் நேரத்தில் நடைபெற்ற மோதல், இப்போது இருவர் ஜாதிய வன்மத் துடன் கொலை செய்யப்பட்டுள்ள அவலத்தில் முடிந்திருப்பது கண்ட னத்திற் குரியது. கொலை செய்யப் பட்ட இருவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

புதிய அரசு அமையும்...

சட்டமன்ற தேர்தல் வாக்குப் பதிவு முடிந்துள்ள நிலையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசு அமையும் வரை தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கினை நிலைநாட்டுவதற்கு காவல்துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், எங்கும் யாராலும் பொது அமைதிக்கு பங்கும் விளைந்து, பொதுமக்களின் நிம்மதியை குலைக்கும் நடவடிக் கைகள் அரங்கேற அனுமதிக்கக் கூடாது என்றும் கேட்டுக்கொள் கிறேன்.

எத்தனை கருத்து மோதல்கள் தேர்தல் களத்தில் இருந்தாலும் தேர்தலோடு அவற்றை மறந்துவிட்டு தமிழக மக்கள் அனைவரும் சகோ தரர்களாக சமூக நல்லிணக்கத்துடன் மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.

கடும் நடவடிக்கை

எனவே, தமிழக காவல்துறை தலைவர் (டி.ஜி.பி.) உடனடியாகத் தலையிட்டு மாவட்ட காவல்துறை அதிகாரிகள் அவரவர் பகுதிகளில் சட்டம்- _ ஒழுங்கு பணிகளை நிலை நாட்டுவதில் எவ்வித சுணக்கமும் காட்டக் கூடாது என்றும் சட் டத்தை கையில் எடுத்துக்கொண்டு செயல்படுவோர் யாராக இருந்தா லும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்து சட்டத்தின் முன்பு நிறுத்திட வேண்டும் எனவும் அறிவுறுத்திடுமாறு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Comments