செய்தியும், சிந்தனையும்....!

கடவுள் கிருபை!'

*           இந்தியாவில் 10.6 சதவிகிதம்பேர் மிகத் தீவிர மன நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

>>           பக்தி முற்றிப் போயிருக்கும்.

ஆட்சிக்கு வருவது தி.மு..வாயிற்றே!

*           தேர்தல் விதிகள் அமலில் இருக் கும்போது துணைவேந்தர் நியமனத் தில் ஆளுநர் அவசரம் காட்டுவது ஏன்?

- துரைமுருகன்,

தி.மு.. பொதுச்செயலாளர்

>>           புதிய ஆட்சி வந்துவிட்டால் சமூகநீதி தலைதூக்குமே!

விளம்பர வெளிச்சம்!

*           உலகளவில் ஒரு லட்சம் மக்களுக்கு 8,900 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது; இந்தியாவிலோ இது 6,310 என்ற விகிதத்தில் உள்ளது..

>>           வெளிநாடுகளுக்கெல்லாம் இந்தியா தடுப்பூசி மருந்து அனுப்பும் அளவுக்குவளர்ந்திருக்கிறதே!'

ஜனநாயகப் படுகொலை

*           தேர்தல் முன் விரோதத்தால் அரக் கோணத்தில் இரு இளைஞர்கள் படுகொலை.

>>           தேர்தல் சூதாட்டமாகி கொலை வரை கழுத்து நீள்கிறது!. (ஜாதியும் இதற்குள் இருப்பது கண்டிக்கத்தக்கது).

ஆளுநரின் அருள்!

*           புதுச்சேரியில் மதுபானங்களின் விலை அதிரடியாகக் குறைப்பு!

>>           குடி'மக்களுக்குக் கொண்டாட்டம்தான்!

கவனம் கரோனா!

*          கரோனா: பக்தர்களுக்குக் கட்டுப் பாடுகள்- இந்து அறநிலையத் துறை அறிவிப்பு.

>>           அய்யய்யோ! கடவுள் விடயத்தில் மூக்கை நுழைப்பதா என்றெல்லாம் குரல் கொடுக்காமல் இருந்தால் சரி!

மக்களுக்கு ஞாபக மறதி அதிகம்!

*           சுங்கச் சாவடி கட்டணம் நியாயமாக இல்லை.

- உயர்நீதிமன்றம் கருத்து

>>           ‘‘ஆட்சிக்கு வந்தால் சுங்கச் சாவடிகளை நீக்குவோம்'' - சொன்னவர் நரேந்திர மோடி.

(மூட)நம்பிக்கைகள்தான்

*           ராமன் பாலம் தேசிய பாரம்பரியமாக அறிவிக்கக் கோரும் வழக்கு - விசாரணை வரும் 26 ஆம் தேதி.

>>           17 லட்சத்து 25 ஆயிரம் ஆண்டு களுக்கு முன் ராமன் பாலம் கட்டினான் - இதனை நம்பவேண்டுமாம்.

Comments