செய்தியும், சிந்தனையும்....!

 'காற்றுள்ள போதே

தூற்றிக் கொள்!'

*         கோவாக்சின் தடுப்பூசி விலை ரூ.1200     

>>           வியாபாரிகள் என்ன தர்ம பிரபுவா?  

இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன?

*           தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் வாக்கு அளிக்காதோர் 1.70 கோடி.  

>>           இவர்கள் வெறும் விமர்சனவாதிகள் - அவ்வளவே!   

அவசரம் எதற்கு அழிவுக்கா?

*          மத்திய பா... ஆட்சியில் ஏழு ஆண்டுகளில் 76 அவசர சட்டங்கள்.        

>>           அவசர கதியில் ஜனநாயகம் அழிந்து வருகிறது.

கொட்டினால்தான் தேள்!

*          தேசியக் கல்விக் கொள்கையின் தமிழ் மொழி பெயர்ப்பை வெளியிட்டுள்ளது மத்திய அரசு   

>>           தமிழர்கள் விழித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.  

சூடான அய்ஸ்சோ?

*            மதுரை கோயில் வளாகத்திலேயே ஆற்றில் இறங்குகிறார் அழகர்

>>           பிள்ளை விளையாட்டு என்று வடலூர் இராமலிங்க அடிகள் சும்மாவா சொன்னார்?

Comments