பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் செயல் தலைவர் ஜே.பார்த்தசாரதி படத்திறப்பு

காணொலியில் தமிழர் தலைவர் நெகிழ்ச்சி உரை

சென்னை, ஏப். 20- அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நலச் சங்கங்கள் கூட்டமைப்பின் செயல் தலைவரும், வாய்ஸ் ஆப் ஓபிசி ஆசிரியரும், பாங்க் ஆப் பரோடா ஓபிசி அமைப்பின் கவுரவத் தலைவரு மான ஜே.பார்த்தசாரதி அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், 18.4.2021 ஞாயிறு காலை 10.30 மணி அளவில், இணையம் வழியே  (ஜூம் செயலி)  நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.

நிகழ்வில் கலந்து கொண்ட அனை வரையும் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி வர வேற்று, தோழர் பார்த்தசாரதியின் சமூக நீதி உணர்வையும், அகில இந் திய கூட்டமைப்புக்கு ஆற்றிய பங்க ளிப்பையும் விரிவாக எடுத்துக் கூறினார்.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரி யர் கி.வீரமணி, தேசிய பிற்படுத்தப் பட்டோர் ஆணையத்தின் மேனாள் தலைவர் நீதியரசர் வீ.ஈஸ்வரய்யா, மேனாள் உறுப்பினர் எஸ்.கே.கார் வேந்தன், சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதிஏ.கே.ராஜன், மாநி லங்களவை உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டு, தோழர் ஜே.பார்த்தசாரதி யின் அயராத உழைப்பையும், உணர் வையும் சிறப்பித்து பேசினார்கள்.

பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் நிர்வாகிகள், ஓபிசி அமைப்பின் தலைவர்கள் ஆகியோர் சார்பில் எம்.ஜார்ஜ் பெர்னாண்டஸ், ஜாங்கிட் (பாங்க் ஆப் பரோடா), எம்.இளங்கோவன் (அய்.அய்.டி.), வி.புருசோத்தமன் (என்.எல்.சி., நெய் வேலி), பிரதீப் தோப்லே (ஏர் இந் தியா), ரவீந்திர ராம் (பீகார்), ரேபா ஹாண்டிக் (அசாம்), .ராஜ சேகரன் (இந்தியன் ஓவர்சீஸ் வங்கி), டி.முத்துகிருஷ்ணன் (சென்னை உரத் தொழிற்சாலை), அக்கிசாகர் (மும்பை), டி.ரவிகுமார் (யூனியன் வங்கி) டி.துரைராஜ் (சி.பி.சி.எல்.), முகேஷ் குமார் சைனி (ஸ்டேட் பாங்க்), முருகன் (சென்சஸ்), மீனாட்சி சுந்தரம் (சென்சஸ்), குர்பீட் சிங் (ரிசர்வ் வங்கி), கிட்டுசாமி (நியூ இந் தியா காப்பீடு), பன்னீர்செல்வம் (பொது மேலாளர், சிபிசிஎல்), இராம.வேம் பையன் (சி.பி.சி.எல்.), ஆர்.பி. இளங்கோ (சிண்டிகேட் வங்கி), கண்ணப்பன், சக்திவேல், தமிழ் நாடு பத்திரிகை வெளியீட்டாளர் சங்கம், வாய்ஸ் ஆப் ஓபிசி கட்டுரையாளர் வேயுறு தோளிபங்கன் (நடராசன்) ஆகியோர் இரங்கல் உரை நிகழ்த் தினர்.

நினைவேந்தல் நிகழ்வில் திரா விடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நண்பர்க ளும் திரளாகக் கலந்து கொண்டனர்.

தோழர் ஜே.பார்த்தசாரதியின் வாழ்விணையர் மற்றும் அவரது பேத்தி, குடும்பத்தார் அனைவர்க்கும் நன்றி தெரிவித்தனர்.

காலை 10.30 மணிக்கு துவங்கிய நினைவேந்தல் நிகழ்ச்சி மதியம் 1.30 மணியளவில் நிறைவுற்றது.

கால் நூற்றாண்டுக்கும் மேலாக சமூக நீதிக்காக பாடுபட்டதுடன், ‘வாய்ஸ் ஆப் ஓபிசி' என்ற மாத இத ழையும் தொடர்ந்து நடத்தி வந்த தோழர் ஜே.பார்த்தசாரதியின் எதிர் பாராத மரணம் அனைவரையும் வெகுவாக பாதித்ததை அனைவரின் உரையும் உணர்த்தியது.

ஜே.பி. அவர்களின் எண்ணத்தை நிறைவேற்றிடஅனைவரும் இணைந்து பணியாற்றி சமூக நீதியை வென்றிடுவது ஒன்றுதான் அவருக்கு நாம் செலுத்தும் சிறந்த மரியாதை என்பதை நெஞ்சில் ஏந்தி செயலாற்ற வேண்டும்.

தோழர் ஜே.பார்த்தசாரதிக்கு நமது வீர வணக்கம்.

Comments