உ.பி. பா.ஜ.க. அரசின் விபரீதம்!

கரோனா தடுப்பூசிக்குப் பதில் வெறிநாய்த் தடுப்பூசி

லக்னோ, ஏப்.10  உத்தரபிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 3 மூதாட்டிகளுக்கு கரோனா  தடுப்பூசி செலுத்துவதற்கு பதிலாக தவறுதலாக ரேபீஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.

 உத்தரபிரதேச மாநிலத்தின் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பொது மக்களுக்கு கரோனா  தடுப்பூசி செலுத்துவதற்காக சிறப்பு முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த மருத்துவமனையில் கரோனா  தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு நேற்று (9.4.2021) சரோஜ் (70), அங்கரளி (72), சத்யவதி (60) என்ற 3 மூதாட்டிகள் சென்றனர். ஆனால், அதே மருத்துவமனையில் வெறிநாய் கடிக்கு போடப்படும் ரேபீஸ் தடுப்பூசி முகாமும் நேற்று நடைபெற்றுள்ளது.

இரு தடுப்பூசி முகாம்களும் நடைபெற்ற நிலையில் மருத்துவ மனைக்கு வந்த மூதாட்டிகள் மூன்றுபேரும் கரோனா  தடுப்பூசி செலுத்தும் பகுதிக்கு சென்று வரிசையில் நிற்காமல் தவறுதலாக ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பகு திக்கு சென்று வரிசையில் நின்றுள்ள னர். அங்கு இருந்த மருத்துவ ஊழியர் எந்த தடுப்பூசி செலுத்த வந்துள்ளனர் என்று மூதாட்டி களிடம் எந்த வித கேள்வியையும் கேட்காமல் ரேபீஸ் தடுப்பூசி செலுத்த தான் வந்துள்ளனர் என்று தவறுதலாக நினைத்துக்கொண்டு மூதாட்டிகள் மூன்று பேருக்கும் ரேபீஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளார்.

கரோனா  தடுப்பூசிக்கு பதிலாக ரேபீஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளோம் என்பது குறித்து அறியாத மூதாட்டிகள் வீடு திரும்பியுள்ளனர். ஆனால், வீடு திரும்பிய மூதாட்டியில் ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த மூதாட்டி தனியார் மருத்துவமனையில் பரி சோதனைக்கு சென்றுள்ளார். அங்கு அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கான சான்றிதழை தனியார் மருத்துவ மனை மருத்துவரிடம் அந்த மூதாட்டி காண்பித்துள்ளார்.

அதை ஆராய்ந்த தனியார் மருத்துவமனை மருத்துவர் மூதாட்டிக்கு கரோனா  தடுப்பூசிக்கு பதிலாக வெறிநாய் கடிக்கு போடப்படும் ரேபீஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதை கண்டு பிடித்து அதிர்ச்சியடைந்தார்.

அந்த தகவலையடுத்து, விசாரணை நடத்திய அதிகாரிகள் அரசு மருத்துவமனையில் மூதாட் டிகள் கரோனா  தடுப்பூசி முகாம் வரிசையில் நிற்பதற்கு பதிலாக ரேபீஸ் தடுப்பூசி முகாம் வரிசையில் தவறுதலாக நின்றதும் மூதாட்டி களிடம் எந்தவித கேள்வியும் கேட்காமல் கரோனா  தடுப்பூசிக்கு பதிலாக ரேபீஸ் தடுப்பூசியை மருத் துவமனை ஊழியர் தவறுதலாக செலுத்தியதையும் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, அரசு மருத் துவமனை ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது தான் உத்தரப் பிரதேசம். இந்த மாநிலத்தின் முதல்வர் சாமியார் ஆதித்யநாத் தமிழகத்தில் பாஜக கூட்டணி வென்றால் தமிழகத்தை வளர்ச்சிப்பாதைக்கு அழைத்துச் செல்வோம் என்று கூறி கோவை தெற்கில் பாஜக வேட்பாளர் வானதி சினிவாசனுக்கு வாக்கு கேட்டுள்ளார்.

Comments