கரோனா பாதிப்புக்கு சைடஸ் நிறுவனத்தின் விராஃபின் மருந்தை பயன்படுத்தலாம்!

புதுடில்லி. ஏப். 24 நாடு முழுவதும் கரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், நோயாளிகளுக்கு ஏற்படும் நுரையீரல் பாதிப்பு காரணமாக, ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள வர்களில்  மிதமான பாதிப்பு உள்ளவர்களுக்கு விராஃபின் மருந்தை பயன்படுத்த மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.

இதுதொடர்பாக நடத்திய ஆய்வில், மருந்து எடுத்துக் கொண்ட 7 நாட்களில் பின்னர் நடத்தப்பட்ட பரிசோதனை முடிவில் கரோனா நெகட்டிவ் என ஆய்வு முடிவுகள் வந்திருப்பதாக தெரிவித்து உள்ளது.

இந்த பரிசோதனை 91.15 சதவீத நோயாளிகளுக்கு நடத்தப்பட்டுள்ளது. இந்த மருந்தை 18 வயதுக்கு மேற்பட்ட லேசான அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகளுக்கு பயனுள்ள தாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்று சைடஸ் நிறுவனம் கூறுகிறது.

91.15 சதவிகிதம் மருந்துகளின் முடிவுகள் மருத்துவ பரிசோத னைகளில் கண்டறியப்பட்டுள்ளன. சரியான நேரத்தில் விராஃபின் மருந்தைக் கொடுப்பது நோயாளிகளுக்கு விரைவாக குணமடையவும், நோயின் மேம்பட்ட கட்டங்களில் காணப்படும் சிக்கல்களைத் தவிர்க்கவும் உதவும் என கூறப்படுகிறது.

இந்தியாவில் 20-25 மய்யங்களில் 250 நோயாளிகளுக்கு மூன்றாம் கட்ட மனித பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் விரிவான முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்று சைடஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் சைடஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக் கையில், நோயின் ஆரம்பத்தில் இந்த மருந்தை பயன்படுத்தினால் நோயாளிகள் விரைவாக குணமடைய இந்த மருந்து உதவும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விராஃபின் மருந்தை  பயன்படுத்தலாம் என இந்திய மருந்து கட்டுப்பாட்டு கவுன்சிலான  டிசிஜிஅய் ஒப்புதல் வழங்கியுள்ளது.

Comments