பா.ஜ.க. ஆளும் குஜராத்தில் மருத்துவமனை அலைக்கழிப்பால் மூச்சுத் திணறலில் பேராசிரியர் உயிரிழப்பு

அகமதாபாத், ஏப்.14- குஜராத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்ட பேராசிரியர் ஒருவரை ஆம் புலன்சில் அழைத்து வரவில்லை எனக்கூறி மருத்துவமனை நிர் வாகம் அனுமதி மறுத்துள்ளது. இதனால் அலைக்கழிக்கப்பட்ட பேராசிரியர் போதிய ஆக்சிஜன் இல்லாமல் பரிதாபமாக இறந்தார்.

குஜராத்தில் உள்ள மத்திய பல்கலை.யில் ஸ்கூல் ஆப் நானோ சயின்ஸ் துறையின் பேராசிரியராக பணிபுரிபவர் இந்திராணி. இவ ருக்கு 2.4.2021 அன்று திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால், அவரது மாணவர்கள் காந்திநகரில் உள்ள ஒரு அகமதா பாத் சிவில் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அப்போது அவரது ஆக்சிஜன் செறிவு நிலை 90 முதல் 92 சதவீதமாக இருந்தது. அந்த நேரத்தில் அகமதாபாத் சிவில் மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லாமல் முழுவதுமாக நிரம்பி இருந்ததால், அவரை வேறொரு தனியார் மருத் துவமனையில் சேர்க்கும்படி ஊழி யர்கள் கேட்டுக்கொண்டனர்.

இதனால், அவரை அருகில் இருந்த தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு போதிய ஆக் சிஜன் வசதியும், வென்டிலேட்டர் அளவும் குறைவாக இருப்பதாக கூறியுள்ளனர்.

அதற்குள்ளாக இந்திராணிக்கு மூச்சுத்திணறல் அதிகமாகவே,  மாணவர்கள்  தனியார் வாகனத்தில் இந்தி ராணியை ஏற்றி, அகமதா பாத்தில் உள்ள மாநகராட்சி கரோனா மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

ஆனால்.எம்.ஆர்.அய்., மற்றும் 108 ஆம் புலன்சில் கொண்டு வரப்படாத தால், மருத்துவமனையில் அவரை அனுமதிக்க மறுத்தனர்.

நிலைமை மோசமடையவே, மீண்டும் காந்திநகர் மருத்துவ மனைக்கே கொண்டு சென்றனர். அந்த நேரத்தில் அவரது ஆக்சி ஜன் அளவு மிகவும் ஆபத்தான நிலையில் 60 சதவீதமாக குறைந் தது. அதிகாலை 2 மணியளவில் அவருக்கு ஆக்சிஜன் இயந்தி ரத்தை மருத்துவமனை பொருத் தியது.

ஆனால், இவ்வளவு அலைக் கழிப்பினாலும், தாமதமான சிகிச்சையினாலும், இந்தி ராணி பரிதாபமாக உயிரிழந்தார். மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவமனையின் அலட்சியம் போன்ற பல கார ணங்களால் இந்திராணி  உயிரி ழந்தது மாணவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Comments