பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்களைக் கொண்டு மெத்தைகள் தயாரிப்பு

காவல்துறையினரால் தீயிட்டு அழிப்பு

ஜல்கான், ஏப். 13- மகாராட்டி ராவில் பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்களைக் கொண்டு மெத்தை தயாரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் கரோனா வைரசின் 2ஆவது அலை பரவி வரும் நிலையில், முகக் கவசமும், சமூக இடைவெளி யும் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி உள்ளன. பயன்படுத்தப்பட்ட முகக்கவசம்  மூலம் கரோனா பரவும் என்பதால் அவற்றை உரிய பாதுகாப்புடன் அப் புறப்படுத்தவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில், மகாராட் டிர மாநிலத்தில் ஜல்கான் மாவட்டத்தில் உள்ள ஆலை யில் பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்கள் கொண்டு மெத்தைகள் தயாரிக்கப்பட்டு உள்ளது, வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குசம்பா என்ற கிராமத்தில் இந்த மெத்தை தயாரிப்பு ஆலை இயங்கி வருகிறது.

சம்பவம் தொடர்பாக, ஆலைக்கே சென்று விசா ரணை நடத்திய அதிகாரிகள் இருப்புவைக்கப்பட்டு இருந்த பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்களை தீயிட்டு அழித்தனர். மெத்தை தயா ரிப்பு நிறுவன உரிமையாளர் மற்றும் பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்களை அவர்க ளுக்கு விற்பனை செய்த குஜ ராத்தைச்சேர்ந்த சில வணி கர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.

கரோனா பரவலை கட் டுப்படுத்த அரசு தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், நோய் பரப்பும் கிருமிகள் கொண்ட முகக்கவசங்களை மெத்தை தயாரிப்புக்குப் பயன்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற் படுத்தி உள்ளது.

Comments