செய்தியும், சிந்தனையும்....!

ஏமாந்த சோணகிரிகளா?

*          கும்பகோணத்தில் அரசியல் கட்சியிடம் டோக்கன் வாங்கி ஏமாந்த வாக்காளர்கள்.

>>           விலை உயர்ந்தது என்று ஒன்றைச் சொன்னால், மதிப்பிற்குரியது என்று பொருள். ஆனால், வாக்குரிமையும் ஒரு விற்பனைப் பொருளாகி விட்டதே!

வீழ்க பண நாயகம்!'

சாதிக்குமா ஜாதி?'

*           தேவேந்திர குல வேளாளர் சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு. மத்திய அமைச்சரிடம் தமிழக வேளாளர் சங்கங்கள் மனு.

>>           ஜாதிக்கும், தமிழர்களுக்கும் என்ன சம்பந்தம்?

இதுதான் இராணுவ வேகம்?

*         உத்தரகாண்டில் இராணுவத்தில் கணவன் மறைவு; 72 ஆண்டுகளுக்குப் பிறகு மனைவிக்கு ஓய்வூதியம் அனுமதி.

>>           மரணத்துக்கு முன் கிடைத்ததே - அதுவரைசந்தோஷமே!'

எந்த வழியில்?

*           ஒரே விஷயத்தில் கவனம் செலுத்தினால் வெற்றி பெறலாம். பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்குப் பிரதமர் மோடி அறிவுரை.

>>           அப்படித்தானே பிரதமரானார் மோடி.

வாக்' அவுட்!

*           தமிழக சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 71 லட்சம் பேர் வாக்களிக்கவில்லை.

>>           வாக்களித்தபடி அரசியல் கட்சிகள் நடந்துகொள்ளவில்லை என்ற கோபமோ!

சங்கராச்சாரியார் வாயில் சர்க்கரை

*           ஏழுமலையான் கோவில் இலவச தரிசனம் ரத்து.

- தேவஸ்தானம் அறிவிப்பு

>>           பக்தி ஒரு பிசினஸ்!' - மறைந்த சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியின் அருள்வாக்கும் பலித்தது.

ஏன் வந்தோம் என்றா?'

*           எனக்கும், கட்சிக்கும் இந்தத் தேர்தல் புதிய அனுபவம்.

- கமலகாசன்

>>           நல்ல பாடம் என்றுகூட சொல்லலாம் அல்லவா!

பாருக்குள்ளே நல்ல நாடு!'

*           வாக்குப் பதிவு எந்திரங்களின் பாதுகாப்பினை உறுதி செய்யவேண்டும்.

- தலைவர்கள் வலியுறுத்தல்

>>           எது எதற்குத்தான் தலைவர்கள் குரல் கொடுக்க வேண்டியிருக்கிறது!

Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
மகாராட்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஊரடங்கா? - சுகாதாரத் துறைச் செயலாளர் பதில்
Image
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை மாற்றுவதா? அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
Image