மக்களை காக்கும் பணியில் பிரதமர் தீவிரமாக செயல்பட வேண்டும்

 கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல் 

சென்னை, ஏப்.16 பிரதமர் மோடி எதையும் அரசியல் கண் ணோட்டத்துடன் பார்க்காமல் இந்திய மக்களின் உயிரையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கிற முயற்சியில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

 தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- இந்தியாவில் கரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டி மக்களி டையே அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

மராட்டியம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் கரோனா தொற்று அதிகரித்துள்ளது. அதேபோல, கரோனாவினால் ஏற்படுகிற உயிர் பலி நேற்று 1027 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 18-ஆம் தேதிக்கு பிறகு கரோனாவுக்கு ஒரே நாளில் இதுதான் அதிகபட்ச உயிரிழப்பு என்பது குறிப்பிடத் தக்கது. அதே போல, தமிழகத்தில் ஒரே நாளில் 7,819 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட் டுள்ளது. இது இதுவரை இல்லாத புதிய உச்சமாகும்.

கடந்த ஆண்டு மார்ச் 23-ஆம் தேதி பொது முடக்கம் செய்யப் பட்ட மறு நாள் பிரதமர் மோடி பேசும் போது, பாரதப் போருக்கு 14 நாட்கள் தேவைப்பட்டது. ஆனால், கரோனா எதிர்ப்பு போருக்கு 21 நாட்கள் கூட தேவைப்படாது என்று பேசியதை இங்கு நினைவுபடுத்த விரும்பு கிறேன்.

இந்தியாவில் இதுவரை 1 கோடியே 38 லட்சம் பேர் கரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். ஒட்டு மொத்த உயிரிழப்பு 1 லட் சத்து 72 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இதுதான் பிரதமர் மோடியின் கரோனா எதிர்ப்பு போரி னால் கிடைத்த பலன்களா? பிரதமர் மோடி எதையும் அரசியல் கண் ணோட்டத்துடன் பார்க்காமல் இந்திய மக்களின் உயிரையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கிற முயற்சியில் தீவிரமாக ஈடுபட வேண்டும். இந்தியாவின் பிரத மராக மோடி செயல்பட வேண் டுமே தவிர, பா...வின் பிரதமராக அவர் செயல்படக் கூடாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Comments