மேற்கு வங்கத்தில் என்னதான் நடக்கிறது?

 2021 ஆம் ஆண்டு பிறந்த உடனேயே பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் நடக்கும் தேர்தல் என்பதால் மக்களிடையே புதிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது,

தமிழகம், புதுச்சேரி, மேற்குவங்கம், கேரளா, அசாம் என அய்ந்து மாநிலத்திற்கும் தேர்தல் நடந்த போது மேற்கு வங்கத்திற்கு 8 கட்டமாக தேர்தல் அறிவித்தது, அனைவரின் புருவத்தையும் உயர்த்தி உள்ளது. எட்டுக் கட்ட தேர்தல் என்பது ஒட்டுமொத்த பாஜக பெரிய தலைவர்களையும் பகுதி பகுதியாக அனுப்பி தேர்தல் பரப்புரை நடத்த எளிதாக அமைந்துவிட்டது, இதற்கு தேர்தல் ஆணையமும் உடந்தையாக உள்ளதோ என்ற அய்யப்பட்டை மம்தா  எழுப்பி இருந்தார்.

 தமிழ்நாடு மற்றும் கேரளாவில் கால் பதிக்க நினைத்த மோடி, அமித்ஷாவிற்கு இரண்டு மாநிலங்களின் கள நிலவரம் கைகொடுக்கவில்லை என்ற உடன் மேற்கு வங்காளத்தில்  முழுமையான பலத்தை பயன்படுத்திக் கொண்டு இருக்கின்றனர்.

பாஜகவை பொறுத்தவரை அந்தந்த மாநி லங்களில் உள்ள கட்சியைப் பிளவு படுத்துவதும், மதக்கலவரங்களை உருவாக்கி மக்களை அச்ச உணர்விற்கு ஆளாக்கி தேர்தலை சந்திப்பதும் அவர்களுக்கு பொழுதுபோக்கான ஒன்றாகி உள்ளது, 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பான புல்வாமா பாதுகாப்பு படையினர் மீதான தாக்குதல் குறித்து அரசியல் நோக்காளர்கள் கேள்வி எழுப்பி அதற்கு பதில் கிடைக்காத நிலையில் மேற்குவங்க தேர்தல் நடைபெற்றுக் கொண்டு இருக்கும் போதே சுக்மா வில் பாதுகாப்பு படையினர் மீதான தாக்குதல் நடந்துள்ளது,

 தேர்தல் காலங்களில் மட்டும் இது போன்ற தாக்குதல்கள் _ - பாதுகாப்புப் படையினர் உயிரி ழப்பு போன்றவை நடைபெறுகிறது, இது குறித்து மக்கள் கேள்வி எழுப்பக் கூடாது என்பதற் காகத்தான் ராமர் கோவில் கட்டுமானம், பங் களாதேஷ் கோவில் பூஜை, கேதர்நாத் குகை தியானம் போன்றவற்றின் மூலம் கல்வியறிவற்ற வட இந்திய இந்துமக்கள் சமூகத்தை திசை திருப்புவது, எதிர்க்கேள்வி கேட்கும் அக்கறை உள்ள சமூகத்தை வேளாண் சட்டம், இதர பிரச்சினைகளின் மூலம் அவர்களை மடைமாற்றி விடுவது போன்றவைகளால் பாஜக செய்யும் அரசியல் மோசடிகள் அப்படியே மறக்கடிக்கப் பட்டு விடுகின்றன.

 தமிழகத்தைப் பொறுத்தவரை 2017-ஆம் ஆண்டிலிருந்து பாஜக ஆட்டுவிக்கும் கைப் பாவை அரசுதான் நடைபெற்று வருகிறது, ஏற்கெனவே பீகாரிலும் அந்த நிலையை உரு வாக்கி விட்டார்கள். எதிர்க்கட்சி தலைவர்களை இதற்காக வருமானவரித்துறை, அமலாக்கத் துறையை பயன்படுத்தி அச்சுறுத்துவது போன்ற வற்றை செய்து அச்சமூட்டும் அரசியலைச் செய்து வருகிறார்கள் மோடி,அமித்ஷா அண்ட் கோ. எல்லை பாதுகாப்புப் படையினரால் ஏப்ரல் 10 அன்று  துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இது குறித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா  பேசு கையில், “மத்தியப் படையினர் நடத்திய துப் பாக்கிச்சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த 4 பேரின் உயிரிழப்புக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா பதில் சொல்ல வேண்டும்.

மத்திய படையினரின் செயல்களை நான் தொடர்ந்து கண்காணித்து வருகிறேன். 4 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, தற்காப்புக்காகத்தான் சுட்டோம் என்று மத்திய படைகள் கூறுகின்றன. இதுபோன்ற பொய்களைக் கூறுவதற்கு தேர்தல் ஆணையம் வெட்கப்பட வேண்டும்.

மக்களின் ஆதரவை இழந்துவிட்டோம் என பா..கவுக்கு உறுதியாகத் தெரிந்துவிட்டதால், மக்களைக் கொல்லும் சதியில் ஈடுபடுகிறார்கள். 

நான் அனைவரிடமும் கேட்பது என்ன வென்றால், அமைதியாக வாக்களியுங்கள். கொல் லப்பட்ட 4 பேருக்குப் பழிவாங்குதல் என்பது தேர்தலில் பா..கவை தோற்கடிப்பதுதான். தேர்தல் தொடங்கியதிலிருந்து சுமார் 18 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். இதில் 12 பேர் நம்முடைய கட்சியைச் சேர்ந்தவர்கள்.” எனத் தெரிவித்தார்.

  ஒரு மாநிலத்தில் மத்திய அரசே கலவரத்தைத் தூண்டும் வேலை நடைபெறுகிறது. அத்துடன் ஒழுக்கக்கேடான செயல்களை செய்வதற்கு காவல்துறையினரையும் தூண்டுகிறார்என்று குற்றம் சாட்டினார். மேற்கு வங்காளத்தை பாதுகாக்கும் ஒரு நடவடிக்கைதான் தற்போதைய சட்டமன்ற தேர்தல் எனக்கூறிய மம்தா  மேற்கு வங்காளத்தை மற்றொரு குஜராத்தாக மாற்று வதை மக்கள் தடுப்பதற்கான நடவடிக்கையே இது எனவும் தெரிவித்தார்.

பல மாநிலங்களில் தேர்தல் நடத்தும் போது, ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் மாநிலங்களில் பல கட்டங்களாக தேர்தல் நடத்தும் மாநிலத்தின் கடைசிக் கட்ட வாக்குப்பதிவு நாளன்று  நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருக்க வேண்டும். இதன் மூலம் வாக்குப்பதிவு முடிந்து, இருபத் தைந்து நாட்கள்  வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாக்கும் அவலம், அதையொட்டி நிகழும் செலவினங்களை, பிரச்சினைகளை களைந்திருக்க முடியும்.

தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடை முறைகள் அமலுக்கு வந்த பின்னர், கிழக்கு வங்காளத்துக்கு பிரதமர் சென்று உரை நிகழ்த்தியதும், மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மம்தாவை வீழ்த்திட நடத்திய நாடக மென்று, அம்மாநில மக்கள் கூறுவதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எப்படியாவது தாங்கள் ஆளாத  மாநிலங்களில் காலூன்ற பாஜக  நடத்தும், விதி மீறல்களுக்கு பாஜகவின் மோசடிகளுக்கு  தேர்தல் ஆணையம் துணை நிற்பது போன்று உள்ளது என்ற கேள்வியை எழுப்பும் அரசியல் பார்வையாளர் களின் கேள்விக்கு விடையளிக்க வேண்டிய  பொறுப்பு தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது.

 மே 2 ஆம் தேதி அய்ந்து மாநில மக்கள் கொடுக்கும் முடிவைப் பொறுத்தே பாஜகவின் இந்த வன்முறை அரசியலுக்கு கடிவாளம் இடப்படும்.

Comments