கரோனா பணிக்கு சென்ற மருத்துவர்மீது காவல்துறையினர் தாக்குதல் விளக்கமளிக்க மனித உரிமை ஆணையம் தாக்கீது

மதுரை, ஏப். 13- கரோனா பணிக்கு சென்ற மருத்துவர், காவல்துறையினரால் தாக்கப்பட்ட விவகாரத்தில், காவல்துறை ஆணையர் விளக்கமளிக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தர விட்டுள்ளது.

மதுரை, கூடல் நகர், கலை வாணன் நகரை சேர்ந்தவர் தமிழரசன். ஹோமியோபதி மருத்துவர் மதுரை அரசு மருத்துவமனை கரோனா அவசர சிகிச்சைப்பிரிவில் பணியாற்றி வருகிறார். கடந்த 10ஆம் தேதி இரவு இருசக்கர வண்டியில் மருத்துவ மனைக்கு சென்ற இவரை தல்லாகுளம் காவல்துறையினர் கடுமையாக தாக்கியுள் ளனர்.

இதுகுறித்து மாநில மனித உரிமைகள் ஆணையம், மதுரை காவல்துறை ஆணையரிடம் அறிக்கை கேட்டு தாக்கீதை அனுப்பியுள்ளது.

அதில், ‘‘கரோனா பணிக்கு சென்ற  மருத்துவர், காவல் துறையினரால் தாக்கப்பட் டது தொடர்பான நாளிதழ் செய்தியின் அடிப்படையில் மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசார ணைக்கு எடுத்துக் கொள்கிற து. இது தொடர்பாக மதுரை காவல்துறை ஆணையர் 3 வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இதன் மீது எந்தவித விளக்க மும் இல்லாவிட்டால் ஆணை யம் உரிய நடவடிக்கையை மேற்கொள்ளும்’’ என கூறப் பட்டுள்ளது.

மருத்துவர் தமிழரசன் கூறும்போது, ‘‘காவல்துறையினரின் அத்துமீறல் தொடர் பாக மனித உரிமைகள் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது, எனக்கு ஆறு தலைத் தந்துள்ளது. தவறு செய்தவர்கள் மீது ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆணையத்தின் நடவடிக்கை என்னைப் போன்ற பாதித்த பலருக்கு நம்பிக்கை அளிக்கும் வகை யில் இருக்கும்’’ என்றார்.

Comments