பொறியியல் மாணவர்களுக்கான ஆன்லைன் திறனாய்வு தேர்வு

சென்னை, ஏப். 9- இந்தியாவின் முன்னணி தேர்வு தயாரிப்பு நிறுவனமான ட்ரையம் பண்ட் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் எஜுகே ஷன் பிரைவேட் லிமிடெட் வரும் 11.4.2021 அன்று 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுக் கான (CAT21/22) என்னும் பொது நுழைவு தேர்வு ஆர் வலர்களுக்கான இணையவழி திறனாய்வு தேர்வுகளை நடத்தவுள்ளது. இந்த தேர்வு காலை 10 மணி மற்றும் மாலை 6 மணி என இருவகை நேரங்களை கொண்டுள்ளது. தேர்வில் கலந்து கொள்ள விரும் பும் மாணவர்கள் இரண்டு நேரங்களில் ஏதாவது ஒன் றைத் தேர்வுசெய்யலாம்.

தேர்வுகளில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 2021 மற் றும் 2022ஆம் ஆண்டுக்கான கேட் வகுப்பறை மற்றும் ஆன் லைன் கல்வி கட்டணத்தில் 100 விழுக்காடு உட்பட பல் வேறு சலுகைகள் உள்ளன. 2021 ஏப்ரல் 11 ஆம் தேதிக்கு முன்னர் தேர்வுகளை எழுதி குறிப்பிட்ட பாடத்திட்டங் களில் சேரும் அனைத்து மாணவர்களுக்கும் மொத்த பாடநெறி கட்டணத்தில் 10% தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு இணைப்பு:

<https://www.time4education.com/local/articlecms/page.php?id=4430>

Comments