ஞாயிற்றுக் கிழமைகளில் இறைச்சி மற்றும் மீன் கடைகள் மூடப்படும்!

  - சேலம் மாநகர ஆணையர்

சேலம்,ஏப்.18- கரோனா தொற்றுப் பரவலின் தாக்கத்தைக் கட்டுப் படுத்தம் நோக்கில், சேலம் மாநக ரப் பகுதிகளில் இனி ஞாயிற்றுக் கிழமைகளில் இறைச்சி மற்றும் மீன் கடைகள் மூடப்படும் என மாநகராட்சி ஆணையர் ரவிச்சந் திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெ ளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி யுள்ளதாவது:

''சேலம் மாநகராட்சி பகுதி களில் கரோனா நோய்த் தொற்றுப் பரவலை தடுக்கும் வகையில் மாநக ராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரு கிறது. விடுமுறை நாள்களில் சந்தைகளில் உள்ள மீன் மற்றும் இறைச்சிக் கடைகளுக்கு அதிகள வில் பொதுமக்கள் வருகை தரு வதாலும், சமூக இடைவெளி கடைப்பிடிக்காததாலும் கரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரியவருகிறது.

ஆகவே, பொதுமக்கள் நலன் கருதி சேலம் பழைய பேருந்து நிலையம் ஆற்றோரப் பாலத்தின் மேல் உள்ள மீன் இறைச்சி சந்தை, சூரமங்கலம் தர்ம நகர் நவீன மீன் இறைச்சி சந்தை ஆகிய வற்றில் உள்ள மீன் மற்றும் இதர இறைச்சிக் கடைகளுக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 18) முதல் வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் விடுமுறை விடப் படுகிறது. மறு அறிவிப்பு வரும் வரை இந்த உத்தரவு தொடரும்.

மீன் மற்றும் இறைச்சி வியா பாரிகள், குத்தகைதாரர்கள், சந் தைக்கு வரும் பொதுமக்கள் இதற்கு ஒத்துழைக்க வேண்டும்." இவ்வாறு சேலம் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் கேட் டுக்கொண்டுள்ளார்.

Comments