யோகி ஆதித்ய நாத் தமிழகம் வந்தார் கலவரம் வெடித்தது! வாக்காளர்களுக்கு ப.சிதம்பரம் எச்சரிக்கை!

 காரைக்குடி, ஏப்‌. 4- காரைக் குடியில் காங்கிரஸ் மூத்த தலைவர் .சிதம்பரம் செய் தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

"தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பிரதமர் மோடி, அமித் ஷா, நட்டா என பாஜக தலைவர்கள் பலரும் கடைசி நேரத்தில் படையெடுக்கின்றனர். அவர்களை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். அவர்கள் பேசப் பேச, தமிழக மக்கள் அவர்களுடைய உண்மை யான நிலையைப் புரிந்து கொள்வார்கள். உத்தரப்பிர தேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் தமிழகத்தில் காலடி எடுத்து வைத்ததும் இங்கே கலவரம் வெடிக்கிறது.

பிரதமர் மோடி வந்தவு டன் தளபதி மு..ஸ்டாலின் மகள் வீட்டில் சோதனை நடக்கிறது. இவையெல்லாம் பாஜவுக்குக் கைவந்த கலை தான். ஸ்டாலின் மகள் வீட் டில் வருமான வரித்துறையி னர் நடத்திய சோதனையில் பணம் எதுவும் கிடைக்க வில்லை.

ஆவணம்தான் கிடைத் தது என்றால், அது எவ்வளவு மோசமான நடவடிக்கை. பாஜக, அதிமுகவினர் வீடுக ளில் சோதனை என்பதே கிடை யாது. ஆனால், தமிழகத்தில் அனைத்து வருமான வரி சோதனைகளும் ஒரே திசை யைச் சுட்டிக்காட்டியே நடக் கின்றன. தேர்தலில் திமுக கூட்டணி 180 இடங்களுக்கு மேல் வெற்றி பெற வேண்டும்.

அப்படி பெற்றால்தான் பாஜகவால் வெற்றியைத் திருட முடியாது. பெண்கள் நலனை பற்றிப் பேச அருகதையே இல்லாத கட்சி பாஜக. இந்தக் கட்சியிடம் எடப்பாடி பழனிசாமியும், . பன்னீர்செல்வமும் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து விட்டார்கள். ஆட்சி மாற்றம் ஏற்பட்டால்தான் தமிழக அரசியலில் மீண்டும் தன் மானம் உயரும்.

தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது எல்லோரும் அறிந்ததுதான். ஆனால், பாஜக கற்றுத் தரும் தேர்தல் பாடம் என்றால், அது தேர் தல் திருட்டு. அது எங்களுக்குத் தெரியாது. கற்றுக்கொள்ள வும் மாட்டோம் என்று

.சிதம்பரம் கூறினார்.

Comments