பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை மாற்றுவதா? அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்

சென்னை, ஏப். 14- பெரியார் .வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயர்  மாற்றப் பட்டுள்ளதற்கு தமிழக  தலைவர்கள் பலரும் கண்டன தெரிவித்துள்ளனர். விவரம் வருமாறு:

வைகோ கடும் கண்டனம்

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கை வரு மாறு,

சென்னை மய்யத் தொடரி நிலை யம், ரிப்பன் மாளிகை அருகே, நெடுஞ்சாலைத் துறையினர், கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு என்று பெயர் பொறித்த பலகையை, புதிதாக நாட்டி இருக்கின்றார்கள்.

1979 ஆம் ஆண்டு, தந்தை பெரியார் அவர்களது நூற்றாண்டு விழாவை, ஓராண்டு தொடர் விழாவாக எம்.ஜி.ஆர். தலைமையில்  .தி.மு.. அரசு கொண்டாடியது.

அப்போது, பூவிருந்தவல்லி நெடுஞ்சாலைஎன்ற பெயரை ‘‘பெரியார் .வெ.ரா. நெடுஞ்சாலை’’ என்று மாற்ற, மக்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று, முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., அவ்வாறு பெயர் மாற்றம் செய்து அரசு ஆணை பிறப்பித்தார்.

ஆனால், எம்.ஜி.ஆர்.பெயரைச் சொல்லிக் கொண்டு ஆட்சி நடத்து கின்ற எடப்பாடி பழனிசாமி அரசு, நெடுஞ்சாலைத் துறை இணைய தளத்தில், தந்தை பெரியார் பெயரை நீக்கிவிட்டு ‘‘கிராண்ட் வெஸ்டன் டிரங்க் ரோடு’’ என்று பெயர் மாற்றம் செய்து இருக்கின்றது.

ஆர்எஸ்எஸ் சங் பரிவார் வகுத்த வியூ கத்தின்படி, டில்லி எஜமான் மோடி பிறப்பித்த ஆணையை, அடிமை எடப்பாடி நிறைவேற்றி இருக்கின்றார். தமிழ்நாட்டின் தன் மானத்தை அடகு வைத்துவிட்டார்.

ஏற்கெனவே, சென்னை வான் ஊர்தி நிலையத்தில் இருந்து, காம ராசர் அண்ணா பெயரை நீக்கியதை யும் அடிமை எடப்பாடி அரசு கண்டு கொள்ளவில்லை. அதன் விளைவாக, இப்போது இந்த மாற்றம் நடந்தது இருக்கின்றது.

தமிழக முதலமைச்சர் மட்டும் அன்றி நெடுஞ்சாலைத் துறைக்கும் பொறுப்பு வகிக்கின்ற எடப்பாடிக்கு, சூடு சொரணை இருந்தால், தன் பெயரைக் காப்பாற்றிக் கொள்ள, இந்தப் பெயர் மாற்றத்தை உடனே நீக்க வேண்டும்; ‘‘பெரியார் .வெ.ரா. நெடுஞ்சாலை’’ என்ற பெயர் தொடர வேண்டும்.

தவறினால், மே மாதம் பொறுப்பு ஏற்கின்ற திமுக ஆட்சி தந்தை பெரியாரின் பெயரை மீண்டும் நிலைநிறுத்தும்.

இவ்வாறு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள் ளார்.

இரா.முத்தரசன் கண்டனம்

சென்னை பெருமாநகரில் கடந்த 1979 ஆம் ஆண்டில், பெரியார் .வெ.ரா. நூற்றாண்டு விழாவை யொட்டி, பொதுமக்களின் கோரிக் கையை ஏற்று அப்போதைய முதல மைச்சர் எம்.ஜி.ஆர். முன்முயற்சியில் பூந்தமல்லி நெடுஞ்சாலைக்குபெரியார் .வெ.ரா. நெடுஞ்சாலை  என பெயர் சூட்டப்பட்டது. கடந்த 42 ஆண்டுளாக மக்கள் பயன்பாட்டில் பெரியார் .வெ.ரா. நெடுஞ்சாலை என்ற பெயர் நிலைத்து நிற்கிறது. இந்த நிலையில் பெரியார் .வெ.ரா. நெடுஞ்சாலை என்ற பெயரை நீக்கி விட்டு, “கிராண்ட் வெஸ்ட்ன் டிரங்க் ரோடுஎன பெயர் மாற்றம் செய்து பெயர் பலகை வைக்கப்பட்டிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

பாஜகவின் அதிகார மிரட்டலுக்கு அடிபணிந்து கிடந்த எடிப்பாடி ஆட்சியில் தந்தை பெரியாரின் சிலை கள் உடைக்கப்பட்டன. பெரியார் பற்றி ஆபாசமாக பேசி இழிவுபடுத் தினர். கருப்புச் சட்டைக்கு காவி சாயம் பூசிப் பார்த்தனர். காவி ஆடை யுடுத்தி அவமதித்தனர். இந்த இழி செயலில் தொடர்ந்து ஈடுபட்ட கும்பலைக்  கட்டுப்படுத்த எடப்பாடி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இப்போது 40 ஆண்டு களுக்கும் மேலாக மக்களிடம் பழகிப் போன, முன்னாள் முதல்வர் எம்ஜி ஆரால் சூட்டப்பட்ட பெரியார் ..வெ.ரா. நெடுஞ்சாலை என்ற பெயர் மாற்றப்படுகிறது என்றால் முதல மைச்சர் உள்ளிட்ட அமைச்சரவைக்கு தெரியாமல் நடந்ததா? யார் நிர்ப் பந்தம் கொடுத்தது, பெரியாரின் பெயரை தமிழ்நாட்டில் நீக்கும் துணிவு எப்படி வந்தது? எவர் ஒருவரும் வெட்கப்படவில்லையா? இந்த அக்கிரமச் செயலை தடுக்கும் முதுகெலும்பு கொண்ட எவரும் ஆளும்தரப்பில் இல்லையா? வெட் கம், வெட்கம்! இதனை ஒரு கணமும் சகித்துக் கொள்ள முடியாது. உடன டியாக பெயர் மாற்ற உத்தரவை ரத்து செய்து, பெரியார் .வெ.ரா. நெடுஞ்சாலை என்ற பெயர் நிரந்தரமாக நீடிக்கும் என தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா கண்டனம்


சென்னையில் உள்ள பெரியார் .வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு என மாற்றம் செய்து நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டுள்ளது.

1979இல் பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை என்ற பெயரை பெரியார் .வெ.ரா.நெடுஞ்சாலை என்று மாற்றி அதற்கான ஆணையையும் வெளியிட்டவர் அதிமுக நிறுவனரும், முன் னாள் முதலமைச்சருமான மறைந்த எம்ஜிஆர் அவர்கள், அந்த எம்ஜி ஆரின் பாதையில் ஆட்சி நடத்திக் கொண்டிருப்பதாகக் கூறிக் கொண் டுள்ள தற்போதைய தமிழக அரசு பெரியார் .வெ.ரா. நெடுஞ்சாலை என்ற பெயரை மாற்றி உள்ளது கண்டனத்திற்குரியது.

மத்திய பாஜகவின் ஆட்டத்திற்கு அடிபணிந்து இந்த பெயர் மாற்றம் நடந்துள்ளது என்பது வெட்ட வெளிச்சமான உண்மையாகும். இந்த பெயர் மாற்றத்தை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொண்டு அங்கீகரிக்க மாட்டார்கள்.

எனவே இந்த புதிய பெயரை உடனடியாக நீக்கி, மீண்டும் பெரியார் .வெ.ரா. நெடுஞ்சாலை என பெயர் மாற்றம் செய்திட உடனடியாக நட வடிக்கை எடுக்க வேண்டும் என தமி ழக அரசை மனிதநேய மக்கள் கட்சி யின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றேன்.

இரா.அதியமான் கண்டனம்

தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னையில்   பூவிருந்தவல்லி நெடுஞ்சாலைக்கு பெரியார் .வெ.ரா நெடுஞ்சாலை என பெயர் சூட்டப்பட்டு  அழைக் கப்பட்டு வருகின்றது.

தற்போது நெடுஞ்சாலையின் பெயர் இல்லாமல் நெடுஞ்சாலைத் துறையால் வைக்கப்பட்டடிருக்கும் அறிவிப்புப் பலகையில்  Grand Western Trunk Road  என குறிப்பிட்டு வைத்திருப்பதற்கு ஆதித்தமிழர் பேரவை சார்பில்  கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றேன்.

தமிழகத்தின் பண்பாடு, மொழி, கலாச்சாரம் என அனைத்திலும் படையெடுப்பு நடத்தி அதை  தனக்கேற்றவாறு மாற்றிட துடிக்கும் மதவாத சக்திகளுக்கு முழு நேர வேலையாட்களாக மாறிய  தமிழ கத்தின் தற்போதைய காபந்து அர சாக செயல்பட்டு வருபவர்கள் உட னடியாக இந்தப் பெயரை பெரியார் .வெ.ரா நெடுஞ்சாலை என மாற்றி அறிவிப்பு பலகை வைத்திட நட வடிக்கை எடுக்க வேண்டும் என  ஆதித்தமிழர் பேரவை சார்பில் வலியுறுத்துகின்றேன்.

தமிழுக்காகவும், தமிழ் மண்ணின் சுயமரியாதைக்காகவும் அரும்பாடு பட்டு உழைத்தவர் தந்தை பெரியார்.

தமிழர்களின் இதயத்தில் ஆழப் பதிந்ததுள்ள தந்தை பெரியாரின் பெயரை அந்தந்த இடத்தில் படிப் படியாக நீக்கம் செய்யத் துடிக்கின்ற மத்திய பாஜக அரசு தனது தேர்தல் அறிக்கையிலே தமிழகத்தின் பெயரை மாற்றுவதற்கும் முனைப்பு காட்டி யுள்ளது.

இதற்கு துளியும் கூட கவலை தெரி விக்காத எடப்பாடி அரசு தற்போது தேர்தல் முடிந்து  காபந்து அரசாக செயல்பட்டு வரும் நிலையில் இந்தப் பெயர் நீக்கம், மாற்றம் செய்து தமிழர்களின் நெஞ்சத்தில் கோபத்தை வரவைத்துள்ளது இந்த எடப்பாடி அரசு.

மே 2 தேர்தல் முடிவுகள் வந்தபின் வரப்போகும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசு இந்த நெடுஞ்சாலைக்கு மீண்டும் பெரியார் .வெ.ரா நெடுஞ்சாலை என பெயர் மாற் றிடும் என திமுக தலைவர் மரியா தைக்குரிய தளபதி மு..ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருப்பது தமிழக மக்களுக்கு பெரும் நம்பிக்கையை தருகின்றது.

தொடர்ந்து தமிழகத்திற்கும், தமி ழக மக்களுக்கும் இந்த காபந்து அரசு செய்துவரும் அனைத்து துரோகங் களுக்கும் இன்னும் சில நாட்களில் தமிழக மக்கள் சபையில் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.

டி.டி.வி தினகரன் கண்டனம்


சென்னையில் பெரியார் .வெ.ரா. நெடுஞ்சாலை பெயரை தமிழக அரசு மாற்றி இருப்பதற்கு .மு.மு.. பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது டுவிட் டரில் கூறியுள்ள அவர், ‘சென்னை - பூவிருந்தவல்லி நெடுஞ்சாலைக்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர் களால் சூட்டப்பட்டிருந்த தந்தை பெரியார் பெயரை நீக்கியிருக்கும் பழனிசாமியின் காபந்து அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.

Comments