காற்றில் கரோனா வைரசை அழிக்கும் கருவி: பாரடே ஓசோன் நிறுவனம் விற்பனை

 புதுடில்லி, ஏப்.24 காற்றில் உள்ள கரோனா வைரசை அழித்து காற்றை சுத்தப்படுத்தும் கருவியை பாரடே ஓசேன் நிறுவனம் தயாரித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி:

முக்கியமாக ஏசி அறையில் உள்ளவர்களுக்கு கரோனா தாக்கம் அதிகமாக ஏற்படுகிறது. ஏசி அறையில் உள்ள காற்று மீண்டும் குளிரூட்டப்பட்டு உள்ளேயே இருக்கும். கரோனா வைரஸ் ஏசி அறைக்குள் வந்துவிட்டால் சில மணி நேரம் அங்கேயே சுற்றிக் கொண்டிருக்கும்.

எனவே, காற்றில் உள்ள கரோனா வைரஸை அழிப்பதே ஒரே வழி. இதற்காக அறையில் உள்ள காற்றை சுத்தப்படுத்தும் ஆர்500எஸ் மாடல் கருவியை பாரடேஓசோன் நிறுவனம் தயாரித்துள்ளது.

கடந்த 25 ஆண்டுகளாக வீரியம்மிக்க ஆக்சிஜன் கருவிகளை உற்பத்தி செய்து 50-க்கும் மேற்பட்ட அய்ரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. ஸி500ஷி கருவி அய்ரோப்பிய உயர்தர சிஇ சான்றிதழை பெற்றுள்ளது. இந்த மாடலை அறையில் பொருத்தினால் அதில் இருந்து வெளிப்படும் அதி

தீவிர ஆக்சிஜன் வாயு, ஒரு மேகம் போல ஒவ்வொரு நிமிடமும் வெளிவந்து ஏசி அறையில் உள்ள கரோனா வைரஸை அழித்துவிடும். பின்னர் அது மனிதர்களுக்கு ஏற்ற ஆக்சிஜன் காற்றாக மாறிவிடும்.

அறையில் உள்ள காற்றை சுத்தப்படுத்தும் கருவி இப்போது விற்பனைக்கும், மாத வாடகைக்கும் கிடைக்கும். (தொடர்புக்கு: யார்க் இந்தியா 9790788817)                            

கும்பமேளாவின் "ஆசியால்" கரோனா பிரபல இசைக் கலைஞர் மரணம்

புதுடில்லி, ஏப்.24 பிரபல இசை அமைப்பாளரும் இந்திப்பாடகருமான சிராவன் ராத்தோட் கரோனா தொற்றால் மரணமடைந்தார். இவரது மனைவி சமீபத்தில் கும்பமேளாவிற்குச் சென்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

சிராவன் மகன் சஞ்சீவ் ஊடக ஒன்றிற்கு அளித்த பேட்டியில் எனது தாயார், அவரது உறவினர்கள் அனைவரும் கும்பமேளாவிற்குச் சென்று வந்தனர். அதன் பிறகு அவர்கள் உடல் நிலை மோசமாகத் துவங்கியது, இந்த நிலையில் எனது வீட்டில் உள்ள அனைவருக்கும் உடல் நலம் குன்றவே மருத்துவப் பரிசோதனை செய்ததில் அனைவருக்கும் கரோனா தொற்று உறுதியானது.

 இதனை அடுத்து அனைவருமே மும்பையில் உள்ள பிரபல மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டோம். இதில் எனது தந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எனது தாயாரில் நிலையும் மோசமாக உள்ளது,

  எங்களுக்கு உத்தரகாண்ட் அரசு சார்பில் கும்பமேளாவில் கலந்துகொள்ள அழைப்பு வந்தது, எனது தந்தை கும்பமேளாவில் பாடல் பாட ஒப்புக்கொண்டார். ஆனால் முக்கிய சில பாடல் பதிவு இருந்த காரணத்தால் அவர் ஏப்ரல் 23 ஆம் தேதி புனிதக்குளியலின் போது க்லந்துகொள்வதாக கூறினார். இந்த நிலையில் எனது குடும்பத்தில் உள்ள அனைவருக்குமே கரோனா தொற்று ஏற்பட்டு தந்தை இறந்துவிட்டார், தாயின் நிலையும் மோசமாக உள்ளது என்று கூறினார்.

தலைநகரின் அவலம்:

டில்லியில்  ஒரேநாளில் 306 பேர் பலிநூற்றுக்கணக்கானோர் கவலைக்கிடம் குவியும் பிணங்கள்

புதுடில்லி. ஏப். 24 தலைநர் டில்லியில் கடுமையான ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கரோனா நோயாளிகளின் இறப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 306 நோயாளிகள் மரணம் அடைந்துள்ளனர். மேலும் புதியதாக 26,169 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தலைநகரின்  மிகப்பெரிய மருத்துவமனைகளில் ஒன்றான  டில்லி  கங்காராம் மருத்துவமனையில் மட்டும்  நேற்று 25 நோயாளிகள் பலியானதாகவும்,  60 நோயாளி கள் கவலைக் கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதே வேளையில் மரணமடையும் நோயாளிகளை பெறுவதிலும் கடும் சிக்கல் நிலவுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

நாடு முழுவதும கரோனா பரவல் உச்சமடைந்துள்ளது. இதனால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க  போதுமான வசதிகள் கிடைக்காத நிலையில், ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுகிறது. தலைநகர் டில்லியில் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக, பலியாகும் நோயாளிகளின் எண்ணிக் கையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

டில்லியில் தற்போதைய நிலையில், 91,618 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில் ஆயிரக்கணக்கானோர் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும், நூற்றுக்கணக்கானோர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக, மருந்து தட்டுப்பாடு, ஆக்சிஜன் பற்றாக்குறை என்றே குற்றம் சாட்டப்படுகிறது.

தலைநகரின் இரண்டாவது பெரிய அரசு மருத்துவமனையான கங்காரம் மருத்துவமனையில் கடுமையான ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் நோயாளிகளின் மரணம் அதிகரித்து வருகிறது. மேலும்,   முக்கிய 5 மருத்துவமனைகளுக்கு கரோனா பாதிப்பு நோயாளிகளை கொண்டு சென்றும் ஒரு மருத்துவமனையில் கூட படுக்கை வசதி இல்லாத அவலம் ஏற்பட்டுள்ளது.  பல மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன, புது நோயாளிகளுக்கு இடமில்லை. அதிகாரிகள் நிலைமைகளை சமாளிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

ஜிடிபி மருத்துவமனையின் எமர்ஜென்சி வார்டில் ஸ்ட்ரெச்சர்கள் இரு மடங்கு அதிகமாகி இருப்பதாகவும், படுக்கை கிடைக்காத நிலையில், ஸ்டெச்சரிலேயே வைத்து சிகிச்சை அளிக்கப்படுவதாகவும்,  சில படுக்கைகள் ஒன்றுக்கு மேற் பட்டோர் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. பல மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக நோயாளிகள் நிரம்பி வழிவதாகவும்,  வாசலில் வரிசைகட்டி நோயாளிகள் காத்துக் கிடப்பதாகவும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர இறந்தோர் உடலைப் பெற முடியாமல் உறவினர்கள் 15-18 மணி நேரம் ஜிடிபி மருத்துவமனை பிணவறை வாசலில் காத்திருக்கின்றனர்.

இதுகுறித்து கூறிய அந்த மருத்துவமனையின் செக்யூரிட்டி, 40 முதல் 50 பேர் பலியாக வருகின்றனர். அவர்களின் உடலை பாது காப்பாக  பேக் செய்து கொடுக்கவே பல மணி நேரங்கள் ஆகிறது. இதனால் காலதாமதம் ஏற்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

 

Comments