பொறியியல் கல்லூரிகளில் பல்கலை. குழு ஆய்வு

 சென்னை, ஏப்.9அங்கீகார நீட்டிப்புக்கு விண்ணப்பித் துள்ள, இன்ஜி., கல்லூரிகளில், பல்கலை குழு நேரில் ஆய்வு செய்யும்என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.

அண்ணா பல்கலையின் அங்கீகாரஇணைப்பு தகுதியில், 550க்கும் மேற்பட்ட, இன்ஜினியரிங் மற்றும், பி.ஆர்க்., கல்லூரிகள் செயல் படுகின்றன.

இந்த கல்லூரிகள், ஒவ்வொரு ஆண்டும், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகத்தின் அங்கீகாரம் பெற வேண்டும்.

அதேநேரம், அண்ணா பல்கலைக் கழகத்தின் பாடத் திட்டத்தை பின்பற்றவும், தேர்வுகள் நடத்தி, பல்கலை சான்றிதழ்களை மாணவர் களுக்கு வழங்கவும், அண்ணா பல்கலையின் இணைப்பு அங்கீகாரம் பெற வேண்டும்.

இந்நிலையில், வரும் கல்வி ஆண்டில், மாணவர் சேர்க் கைக்கும், அங்கீகாரத்துக்கும் விண்ணப்பித்துள்ள கல்லூரி களுக்கு, அண்ணா பல்கலை தரப்பில் சுற்றறிக்கை அனுப்பப் பட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது: பல்கலைக்கழகத்தில் இணைப்பு தகுதிக்கு விண் ணப்பித்துள்ள கல்லூரிகளில், உள் கட்டமைப்பு வசதிகளை நேரில் ஆய்வு செய்ய பல்கலை.யில் இருந்த, பேராசிரியர்கள் மற்றும் நிபுணர்கள் அடங்கிய குழு அனுப்பப்படும்.

கல்லூரி மைதானம், நூலகம், ஆய்வகம், வகுப்பறை வசதிகள், குடிநீர், கழிப்பறை வசதிகள் மற்றும் கல்லூரி வளாகத்தில் உள்ள கட்டடங் களுக்கான, சட்ட ரீதியான அனுமதி மற்றும் ஆவணங்கள் ஆய்வு செய்யப்படும்.

இவ்வாறு, அதில் கூறப்பட் டுள்ளது.

Comments