"ராமன்" பாலத்தை தேசிய புராதனச் சின்னமாக அறிவிக்கக்கோரிய வழக்கு அறிவியல் பூர்வமாக ஆராயப்பட வேண்டும் : உச்சநீதிமன்றம்

புதுடில்லி, ஏப்.9  ராமன் பாலத்தை தேசிய புராதனச் சின்னமாக அறி விக்கக்கோரிய வழக்கை விரைந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்தியா- _ இலங்கை இடையே தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரை கடற்பகுதியில் 13  மணல் திட்டைகள் உள்ளன. இது ராமன் காலத்தில் கட்டப்பட்ட பாலம் என கற்பனையாக கூறப்படுகிறது. இந்தப் பாலம் ஆதாம் என்றும் அழைக்கப் படுகிறது.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு:

இதனிடையே, ராமன் பாலம் இந்துக்களின் அடையாளம், இந்துக் களின் நம்பிக்கை சார்ந்த விஷயமாக உள்ளதால், ராமன் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக் கோரி, பாஜக மூத்த தலைவர் சுப்பிர மணியன்சாமி  உச்சநீதிமன்றத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். கடந்த 2018ஆம் ஆண்டு, இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க உத்தர விட்டிருந்தது. 

இதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி, ராமன் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிப்பது தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக மூன்று மாதங்களுக்குப் பின்னர் மீண்டும்  உச்சநீதிமன்றத்தை அணுகு மாறும் சுப்பிரமணியன் சாமிக்கு தலைமை நீதிபதி அறிவுறுத்தினார்.

உச்சநீதிமன்றத்தில் புதிய வழக்கு:

இதனிடையே, அழகப்பா பல் கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் தரப்பில் ஒரு புதிய இடைக்கால மனு ஒன்றை கடந்த பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ராமர் பாலத்தை  தேசிய புராதனச் சின்னமாக அறிவிக்கக்கூடாது. இது பொது மக்களின் பயன்பாட்டுக்காக கட்டப் பட்டவை கிடையாது. இது கால நிலை மாற்றத்தினால் ஏற்படும் மணல் திட்டுகள் மட்டுமே ஆகும். இதற்காக பல்வேறு தொல்லியல் ஆய்வு முடிவுகள் இருக்கிறது. இதைத் தவிர ராமர் பாலத்தின் ஒரு பகுதி மட்டுமே இந்திய எல்லைக்குள் உள் ளது. மீதம் உள்ள பகுதிகள் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.

ஒருவேளை இது தேசிய புராதனச் சின்னமாக அறிவிக்கப்படும் பட்சத் தில் இந்திய எல்லைக்குள் உள்ள பகுதிகள் பாதுகாக்கப்படும். ஆனால், இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை எப்படி பாதுகாக்க இயலும்? அதனால் இந்த விவகாரத் தில் சுப்பிரமணியசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டது.

உச்சநீதிமன்றம் மறுப்பு:

தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில்  சு.சாமி தரப்பில், கடந்த ஆண்டு உச்சநீதி மன்றம் கூறியது போல இந்தாண்டு ராமர் பாலம் தொடர் பான மனுவை விசாரணைக்கு எடுத்து ராமர் பாலத்தை தேசிய புராதனச் சின்னமாக அறிவிக்கக் கோரப்பட் டது. ஆனால், இந்த வழக்கை விசா ரிக்க காலம் தேவைப்படும். அறிவியல் பூர்வமாக ஆராயப்பட வேண்டும். நம்பிக்கை மற்றும் அடையாளம் என பல்வேறு விவ ரங்கள் குறித்து ஆராய வேண்டியுள்ளது. அதற்கான நேரம் தற்போது இல்லை. ஏனென்றால், வரும் 24-ஆம் தேதியுடன் பதவி முடியவுள்ள காரணத்தினால், மனுவை விசாரிக்க வில்லை. அடுத்து வரும் தலைமை நீதிபதி மனுவை விசாரிப்பது குறித்து முடிவு எடுப்பார் என்று திட்ட வட்டமாக தெரிவித்துவிட்டார்.

Comments