சுருக்கமான செய்திகள்

பரப்புரையில் மோடி பிசி

மகாராட்டிரா மாநிலத்தில் கரோனா 2ஆவது அலை காரணமாக நோயாளிகள் அலை அலையாய் மருத்துவமனைகளை நாடிச் செல்கின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடியுடன் பேசப் பிரதமர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டபோது, அவர் மேற்குவங்க தேர்தலுக்கான பரப்புரையில் பிசியாக இருப்பதாக பதில் வந்தது என மகாராட்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

12ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு

தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரிப்பால், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப் படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் செய்முறைத் தேர்வுகள் மட்டும் திட்டமிட்டப்படி நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.

கரோனா கட்டுப்பாடுகளால் தடுப்பூசி போடும் பணி பாதிக்கக் கூடாது- மத்திய அரசு அறிவுறுத்தல்

கரோனா கட்டுப்பாடுகளால் தடுப்பூசி போடும் பணி பாதிக்கப்படக் கூடாது என மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும், பொது மக்கள் தடுப்பூசி முகாம்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் எந்த இடையூறும் ஏற்படக் கூடாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

12 நாள்களில் இரு மடங்கு அதிகரித்த கரோனா தொற்று!

இந்தியாவில் கரோனா தினசரி பாதிப்பானது கடந்த 12 நாள்களில் 8 சதவீதத்திலிருந்து, 16.69 சதவீதமாக அதிகரித்துள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கமலா ஹாரிசுக்கு கொலை மிரட்டல்: பெண் கைது

அமெரிக்காவின் துணை அதிபராக சமீபத்தில் பொறுப்பேற்ற இந்திய வம்சாவளி அமெரிக்கரான கமலா ஹாரிசுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்த நிலையில், பெண் ஒருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

பிரச்சார கூட்டத்தை ரத்து செய்தார் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி

கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக மேற்கு வங்கத்தில் தனது தேர்தல் பிரச்சார கூட்டங்களை ரத்து செய்வதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.

ஜெஇஇ மெயின் தேர்வுகள் ஒத்திவைப்பு!

பொறியியல் படிப்புக்கான ஜேஇஇ நுழைவுத்தேர்வு வரும் 27, 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்தது. தற்போது கரோனா பரவல் காரணமாக இந்தத் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப் பட்டிருக்கின்றன. 15 நாட்களுக்கு முன்னர் தேர்வு தேதி அறிவிக்கப் படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்திருக்கிறது.

Comments