தோட்டக்கலை பூங்காக்கள் பார்வையாளர் நேரம் குறைப்பு

சென்னை, ஏப்.14 தோட்டக் கலைத் துறையினர், சென்னை, திண்டுக்கல், நீலகிரி, சேலம், ராமநாதபுரம், தென்காசி, கன்னியாகுமரி ஆகிய, ஏழு மாவட்டங்களில், 21 பூங்காக் களை அமைத்துள்ளனர்.

இங்கு அரியவகை மரங்கள், பூச்செடிகள் உள்ளிட்டவை பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த பூங்காக்களுக்கு, வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து சுற்றுலா பயணியர், தாவரவியல் படிக்கும் மாணவர்கள் வந்து செல்கின்றனர்.

இதில் மலைப்பகுதிகளில் உள்ள பூங்காக்களில், கோடை விழாக்களும் நடத்தப்படு கின்றன.

அத்தகைய நாட்களில், பூங் காவை பார்வையிடுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும்.

கரோனா ஊரடங்கு கார ணமாக, 2020இல், தோட்டக் கலை பூங்காக்களில் கோடை விழா ரத்து செய்யப்பட்டது.

இதனால், தோட்டக் கலைத் துறைக்கு வருவாய் குறைந்தது. இந்தாண்டும், கரோனா பரவ வாய்ப்பு இருந் ததால், மாவட்ட நிர்வாகங் களுடன் இணைந்து, கோடை விழாவிற்கான முன்னேற்பாடு களை, தோட்டக்கலைத்துறை செய்யவில்லை.எதிர்பார்த்த படியே, கரோனா இரண் டாவது அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

இதையடுத்து, பொது மக்கள் அதிகளவில் கூடுவ தற்கு, அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, தோட்டக்கலைத் துறையின், 21 பூங்காக்களிலும் பார்வை யாளர்கள் நேரம் கணிசமாக குறைக்கப்பட்டு உள்ளது. வழக்கமாக, காலை 8 முதல் இரவு 7 மணி வரை பூங்காக்கள் இயங்கும். தற்போது, பார்வை யாளர் நேரம் மாலை 5 மணி வரையாக குறைக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் உள்ள, தேனாம்பேட்டைசெம் மொழி பூங்கா, கோபாலபுரம் செங்காந்தள் பூங்கா, மாதவரம் செயல்விளக்க பூங்கா,  புது வண்ணை பராம் பரிய பூங்கா ஆகியவற்றிலும், இந்த நடை முறை அமலுக்கு வந்துள்ளது.

அதேநேரம், செம்மொழி பூங்கா மற்றும் செங்காந்தள் பூங்காவில், முகக் கவசம் அணியாதவர்கள் அதிகளவில் அனுமதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

Comments