ரயில் நிலையத்தில் நுழைய அனுமதியில்லை நடைமேடை அனுமதிச் சீட்டு வழங்குவதில் மாற்றம்

சென்னை, ஏப். 20- தமிழகத்தில் கரோனா 2ஆம் அலையின் தாக்கம் அதிகரித்து வருகி றது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக் கைகள் எடுக்கப்பட்டு வரு கின்றன. அதன் ஒருபகுதியாக சென்னை ரயில்வே கோட் டத்தில் உள்ள 5 ரயில் நிலையங்களில் நடைமேடை அனுமதிச்சீட்டு வழங்குவதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே கடந்தாண்டு கரோனா காரணமாக நிறுத் தப்பட்ட நடைமேடை அனு மதிச்சீட்டு வழங்குவது மூத்த பயணிகள், நோயுற்ற பயணி கள், மாற்றுத்திறனாளி பய ணிகளின் கோரிக்கையை ஏற்று மீண்டும் தொடங்கப்பட்டது. ஆனால் ரயில் நிலையங்களில் தேவையின்றி மக்கள் வரு வதைக் கட்டுப்படுத்தப்படுத்த கட்டணம் ரூ.50 ஆக வசூலிக் கப்பட்டது.

இந்நிலையில் சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்ப ரம், காட்பாடி, அரக்கோணம், செங்கல்பட்டு ஆகிய நிலை யங்களில் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளுடன் வருபவர்களுக்கு மட்டுமே நடை மேடை அனுமதிச்சீட்டு வழங் கப்படும் என்றும், மற்றவர்க ளுக்கு அனுமதி இல்லை என் றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Comments