ஏட்டுத் திக்குகளிலிருந்து...

 24.04.2021

டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:

· மதம் இப்போது, நமது அரசியலின் ஒரு பகுதியாக மட்டுமல்லாமல், நமது பொருளாதாரத்தின் ஒரு பகுதியாகவும் அதிகரித்துள்ளது என அரசியல் ஆய்வாளர் மோகன் குருசாமி குறிப்பிட்டுள்ளார்.

· தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்திடுவது குறித்து அறிக்கை அளித்திட உச்ச நீதிமன்றம் தமிழக அரசைப் பணித்துள்ளது.

நியூஇந்தியன் எக்ஸ்பிரஸ்:

· புதிய கோவிட் தடுப்பூசிக் கொள்கை மூலம் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்அய்அய்) என்ற தனியார் நிறுவனம் தடுப்பூசி விலை மற்றும் கொள்கையில் ஆதிக்கம் செலுத்துவதற்கும், சூப்பர் லாபம் ஈட்டுவதற்கும் மோடி அரசு அனுமதித்துள்ளது என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தி டெலிகிராப்:

· கோவிட் தொற்று குறித்து உயர் நீதிமன்றங்கள் விசாரித்து வரும் நிலையில், அத்தனை வழக்குகளையும் உச்ச நீதிமன்றம் விசாரிக்கும் என அறிவிப்பது மிக மிகத் தவறானது என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

· தொற்றுநோயும், அதன் தொடர்ச்சியான அலைகளும் ஒரு பலவீனமான பொருளாதாரம் மற்றும் சமூக இழை ஆகிய வற்றின் பின் வந்துள்ளன. இது உண்மையில் பிரிவினைக்குப் பின்னர் நாடு சந்தித்த மிகப்பெரிய நெருக்கடியாக இருக்கலாம் என வரலாற்றாசிரியர் இராமசந்திர குகா குறிப்பிட்டுள்ளார்.

- குடந்தை கருணா

Comments