அய்க்கிய அமீரகத்தில் முதல் விண்வெளி வீராங்கனை தேர்வு

அமீரகம், ஏப். 14- விண்வெளிக்கு அனுப்பத் தங்களது நாட் டைச் சேர்ந்த முதல் விண் வெளி வீராங்கனையை அய்க் கிய அரபு அமீரகம் தேர்வு செய்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக அய்க்கிய அரபு அமீரகம், விண்வெளி ஆராய்ச்சியில் பல முன்னேற்றங்களை அடைந்து வருகிறது. அந்த வகையில் தங்கள் நாட்டின் முதல் விண்வெளி வீராங்க னையை உலக நாடுகளுக்கு அய்க்கிய அரபு அமீரகம் அறி முகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அய்க்கிய அரபு அமீரக அரசு வெளியிட்ட அறிக்கையில், 27 வய தான நோரா அல் மத்ருஷி என்ற வீராங்கனை, அய்க்கிய அரபு அமீரகம் சார்பாக விண்வெளிக்கு அனுப்பப்பட இருக்கிறார். இவர் மெக்கா னிக்கல் பொறியியல் படித் துள்ளார். விரைவில் நாசா வில் நடக்கவிருக்கும் பயிற்சி வகுப்பில் இவர் கலந்து கொள்ள இருக்கிறார் என்று தெரிவித்துள்ளது.

வளைகுடா நாடுகளில் அய்க்கிய அரபு அமீரகம், முதல் முறையாக செவ்வாய் கிரகத்துக்குநம்பிக்கைவிண் கலத்தை அனுப்பி கடந்த ஆண்டு சாதனை புரிந்தது. ஜப்பான் நாட்டிலிருந்து இந்த விண்கலம் வெற்றிகர மாக விண்ணில் செலுத்தப் பட்டது.

அய்க்கிய அரபு அமீரகம் இதற்கு முன் 2009, 2013ஆம் ஆண்டுகளில் தென் கொரியா வுடன் இணைந்து விண்கலங் களை விண்ணுக்கு அனுப்பியிருந்தாலும், 2014ஆம் ஆண் டுதான் சொந்தமாக விண் வெளி மய்யத்தை அமைத்தது. ஆனால், அடுத்த 6 ஆண்டு களில் வளைகுடா நாடுகளில் உள்ள ஒரு சிறிய நாடு, செவ் வாய் கிரகத்தை ஆய்வு செய்ய விண்கலத்தை அனுப்பியது இதுவே முதல் முறை என்று பாராட்டப்பட்டது.

அய்க்கிய அரபு அமீரகம் தங்களது பொருளாதாரத் திற்கு எண்ணெய் வளத்தை நம்பி இருப்பதை சமீப ஆண் டுகளாகக் குறைத்துள்ளது. இதன் காரணமாக அறிவியல் தொழில்நுட்பத் திறன்களை வளர்த்து வருகிறது

Comments