‘நக்கீரன்' கேள்வி

 அயன்புரம், .சத்தியநாராயணன்,

சென்னை-72

"வங்க தேசத்தின் சுதந்திரத்திற்காக  சிறை சென்றேன்" என்று மோடி கூறு கிறாரே?

இந்தியாவின் கிழக்குப் பகுதியில் வங்காளம் இருக்கிறது. மேற்குப் பகுதியில் மோடியின் குஜராத் இருக் கிறது. எப்போது அவர் மேற்கிலிருந்து கிழக்கிற்குச் சென்றார்? எந்த ஊரில் போராட்டத்தில் கலந்து கொண்டார்? எத்தனை நாட்கள் சிறையில் இருந்தார்? அவருடன் போராடி யவர்கள் யார் - யார்? இவற்றில் எதற்கேனும் ஆதாரத்தை அளிப்பார், பொறுப்பு வாய்ந்த பிரதமர் பதவியில் இருக்கும் மோடி என நம்புவோம். உண்மையில், வங்காளத்தில் நடந்த சுதந்திரப் போராட்டத்திற்கு  இந்தியர்கள் போராட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. இந்திய ராணு வத்தை அனுப்பி விடுதலை கிடைக்கச் செய்தவர் அன் றைய பிரதமர் இந்திரா காந்தி.

நன்றி: ‘நக்கீரன்', 7.4.2021

Comments