திருவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மறைவு தமிழர் தலைவர் ஆசிரியர் இரங்கல்

திருவில்லிப்புத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.. தலைமை யிலான மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் போட்டியிட்ட  காங்கிரஸ் வேட் பாளர் திரு. மாதவராவ் அவர்கள் (வயது 63) உடல் நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி மிகவும் துயரம் தரும் செய்தியாகும்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர்களுக்கும், அவர் சார்ந்த காங்கிரஸ்  கட்சியினருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

 கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்   

சென்னை       

12-4-2021           

Comments