சுட்டுரைப் பதிவுகள் நீக்கம் இரண்டு நாட்களாக டில்லியைத் தவிர வேறு மாநில கரோனா அவலங்கள் மறைப்பு

 புதுடில்லி. ஏப். 26- கரோனா நெருக்கடியை, மத்திய மோடி அரசு கையாளும் விதம் குறித்து, சில பிரபலங்கள், சுட்டுரையில் விமர்சித்து வெளியிட்ட பதிவுகளை நீக்கும்படி, சுட்டுரை நிறுவனத்தை கோரியுள்ளது மோடி அரசு.

மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டது. அத்துறைக்கு அமைச்சராக இருப்பவர் ரவிசங்கர் பிரசாத். இதனையடுத்து, சில பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள், மோடி அரசின் மட்டமான செயல்பாடுகள் குறித்து வெளியிட்ட பதிவுகளை நீக்கியுள்ளதுடிவிட்டர்' நிறுவனம்.

இத்தகயைப் பதிவுகள், இந்தியாவின் அய்.டி. சட்டங்களுக்கு எதிரானது என்றுடிவிட்டர்' நிறுவனத்திடம் குறிப்பிட்டிருந்தது மோடி அரசு என்பது கவனிக்கத்தக்கது. தனது செயல்பாட்டை, மக்களுக்கானதாக மாற்றிக்கொள்ள முயலாத மோடி அரசு, இதுபோன்ற கருத்து சுதந்திரங்களின் மீது எப்போதுமே கைவைத்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக சமூகவலைதளங்களில் கரோனா தொற்று மோசமாக உள்ள குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், அரியானா போன்ற மாநிலங்களில் இருந்து எந்த தகவலும் பகிரப்படவில்லை. ஆனால் டில்லி தொடர்பான கரோனா தொற்று செய்திகள் அதிகம் பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது, டில்லியில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறுவதால் இந்த கரோனா தொற்றை காரணம் காட்டி மத்திய பாஜகபிண' அரசியலில் ஈடுபட்டு வருகிறது

Comments