கிழக்கு லடாக்: தற்போதைய சாதகமான போக்கை இந்தியா ஏற்க வேண்டும் - சீன ராணுவம் சொல்கிறது

பீஜிங், ஏப். 14- கிழக்கு லடாக் கில் பங்கோங்சோ ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரை களில் இருந்து இந்தியாவும், சீனாவும் படைகளை விலக் கியுள்ளன. அங்கு மீதமுள்ள இடங்களிலும் படைகளை திரும்பப்பெறுவது தொடர் பாக கடந்த 9ஆம் தேதி இரு நாட்டு ராணுவ அதிகாரி களும் சந்தித்து பேசினர்.

இரு நாட்டு ராணுவ அதிகாரிகளுக்கு இடையே நடந்த இந்த 11ஆவது சுற்று பேச்சுவார்த்தையில் கோக்ரா, தேப்சாங், ஹாட்ஸ் பிரிங் போன்ற பகுதிகளில் இருந்தும் படைகளை திரும் பப்பெறுவது தொடர்பாக இரு தரப்பும் விரிவாக பேசியதாக இந்திய ராணுவம் பின்னர் வெளியிட்ட அறிக் கையில் கூறியிருந்தது.

அங்கு மேற்கொண்டு எந்த பிரச்சினைகளையும் ஏற் படுத்தாமல், தற்போதைய நிலைத்தன்மையை கூட்டாக பராமரிப்பது என்றும், நிலு வையில் உள்ள பிரச்சினைக ளுக்கு தீர்வு காணும் நட வடிக்கைகளை வேகப்படுத்த இருதரப்பும் ஒப்புக்கெண்ட தாகவும் அதில் கூறியிருந்தது.

இந்த நிலையில் எல்லை யில் நிலவும் தற்போதைய சாதகமான போக்கை இந் தியா ஏற்க வேண்டும் எனவும், அங்கு அமைதியை பராமரிக்க வேண்டும் எனவும் சீன ராணு வம் கூறியுள்ளது. முந்தைய பேச்சுவார்த்தைகளில் எட் டப்பட்ட ஒருமித்த முடிவை இருதரப்பும் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அந்த நாடு கூறியுள்ளது.

சமீபத்திய பேச்சுவார்த்தை தொடர்பாக சீன ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கை யில், ‘இரு நாட்டு ராணுவத் துக்கு இடையே ஏற்படுத் தப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் மற்றும் முந்தைய பேச்சு வார்த்தைகளில் எடுக்கப் பட்ட ஒருமித்த முடிவுக ளின் படி, எல்லையில் பதற்றத் தணிப்பு தொடர்பான தற் போதைய சாதகமான போக்கை இந்தியா ஏற்று, எல்லைப்பகுதிகளில் அமை தியை ஏற்படுத்தும் என நாங் கள் நம்புகிறோம். அத்துடன் எல்லையில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை பராமரிக் கும் சீனாவின் இலக்கை நோக்கி நகர்வார்கள் எனவும் எதிர்பார்க்கிறோம்என்று கூறப்பட்டு இருந்தது.

இருநாட்டு ராணுவத் துக்கு இடையே நடந்துள்ள 11ஆவது சுற்று பேச்சுவார்த்தை சுமார் 13 மணி நேரம் நீடித் தது. ஆனால் இந்த பேச்சு வார்த்தையில் குறிப்பிடத்தக்க எந்தவித முன்னேற்றமும் ஏற் படவில்லை என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஏனெனில் சீன அதிகாரி கள் முன்கூட்டியே திட்டமிட்ட மனநிலையிலேயே கலந்து கொண்டதாகவும், எந்த வகையிலான நெகிழ் வுத் தன்மையையும் அவர்கள் காட் டவில்லை எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Comments