வீட்டிற்கு ஒரு உறுப்பினர், உறுப்பினருக்கு ஒரு புத்தகம்: கோலார் மாவட்ட நூலகத்துறை புது திட்டம்

கோலார், ஏப். 10 கரோனா  தொற்று பரவல் காரணமாக நூலகம் வந்து படிப் பதை தவிர்க்க  வீட்டிற்கு ஒரு உறுப்பினர், உறுப்பினருக்கு ஒரு புத்தகம் என்ற புதிய டிஜிட்டல் நூலக திட்டத்தை கோலார் மாவட்ட தலைமை நூலக துறை அறி முகம் செய்துள்ளது. ஒவ்வொரு மனிதர் களின் அறிவு வளர்ச்சிக்கு புத்தகம் படிப்பது அவசியம் என்ற கருத்தை பல மேதைகள் கூறியுள்ளனர்.

கரோனா தொற்று காரணமாக நூல கங்கள் மூடப்பட்டுள்ளது. இதனால் நாளிதழ் உள்பட புத்தகம் படிக்கும் ஆர்வ முள்ளவர்கள் பாதிக்கப்பட்டுள்ள னர். அவர்களின் வசதிக்காக கோலார் மாவட்ட நூலகத்துறையால் கடந்தாண்டு நவம்பர் மாதம் டிஜிட்டல் நூலகம் என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. இத்திட்டத்தில் படிக்கும் ஆர்வர் உள்ளவர்களை உறுப்பினர் களாக சேர்க்கும் பணி தொடங்கப்பட் டுள்ளது. இதற்காக தனியாக தயாரித் துள்ள வாகனங்கள் நகரம் தொடங்கி கிராமங்கள் வரை செல்கிறது.

டிஜிட்டல் நூலகத்தில் இலவசமாக உறுப்பினர்களை சேர்த்து வருகிறது. இதில் உறுப்பினர்களாக சேர்ந்துள்ள வர்கள் தங்களிடம் உள்ள அலைபேசி, மடிக் கணினி, கணினி ஆகியவற் றில் நாளிதழ்கள், வார இதழ்கள், வேண்டிய புத்தகங்கள்படிக்கும்வசதி ஏற்படுத்தியுள்ளது. இது தவிர மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், கருநாடக அரசுப் பணியாளர் தேர்வா ணையம், பல்கலைகழக மானிய குழு, நெட் உள்ளிட்ட தேர்வுகள் தொடர் பான விவரங்களும் டிஜிட்டல் நூலகத் தில் இடம் பெற்றுள்ளது. இத்திட்டத்தை மேலும் விரிவுப் படுத்தும் நோக்கத்தில் வீட்டிற்கு ஒரு உறுப்பினர், உறுப்பின ருக்கு ஒரு புத்தகம் என்ற திட்டத்தை மாவட்ட நூலகத் துறை தொடங்கியுள் ளது. நகரப் பகுதி மட்டுமில்லாமல் ஒவ் வொரு கிராமத் திற்கும் சென்று வீட்டில் உள்ளவர்களில் ஒருவரை டிஜிட்டல் நூலகத்தில் உறுப் பினராக்கும் பணியை தொடங்கியுள்ளது. மேலும் டிஜிட்டல் நூலகத்தில் உறுப் பினராக விரும்புவோர் 08152-222821 மற்றும் 9845228125 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட நூலக துறை தெரிவித்துள்ளது.


Comments