மாணவர்கள் வருகை: பள்ளிகளுக்கு தடை

சென்னை, ஏப்.18 ’செய் முறை தேர்வு இல்லாத பிளஸ் 2 மாணவர்கள் பொதுத்தேர்வு வரை பள்ளிக்கு வர வேண் டாம்என பள்ளிக் கல்வி அதிகாரிகள் அறிவித்துள் ளனர்.

பிளஸ் 2 மாணவர்களுக்கு நேற்று (16.4.2021) செய்முறை தேர்வு துவங்கியது. இதை யடுத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் வழியே பள்ளி களுக்கு புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அதன் விவரம்:

பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடக்கும் நிலையில் தேர்வு எழுதும் மாணவர்கள் மட்டும் அதற் கான நேரத்தில் பள்ளிகளுக்கு வர வேண்டும்.

அதேநேரம் செய்முறை தேர்வு இல்லாத மாணவர்கள் மே 5ஆம் தேதி தேர்வு துவங்கும் வரையில் பள்ளி களுக்கு வரவேண்டாம். அவர்களுக்கு தேர்வுக்கு ஆயத்தமாவதற்குத்தான் விடுமுறை விடப் படுகிறது.

தங்களுக்கான அனைத்து பாட செய்முறை தேர்வு களையும் முடிக்கும் மாண வர்களும் மே 5 தேர்வு நாள் வரை பள்ளிகளுக்கு வர வேண்டாம். வீட்டில் இருந்த வாறு தேர்வுக்கு முழுமையாக தயாராக வேண்டும். இவ் வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments