கரோனா பாதிப்பு அதிகரிப்பு: கேரளாவில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க முடிவு

திருவனந்தபுரம், ஏப்.8 கரோனாவின் 2 ஆவது அலை தீவிரமடைந்து வருவதை கருத்தில் கொண்டு கேரளாவில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க முடிவு செய்யப்பட்டது.

கேரளாவில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்று 3,502 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தினசரி பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மொத்த பலி எண்ணிக்கை 4,710 ஆக உயர்ந்து உள்ளது.

இந்த நிலையில் நேற்று (7.4.2021) கேரள தலைமை செயலாளர் ஜாய் தலைமையில் கரோனா கண்காணிப்பு உயர் மட்ட குழு கூட்டம் திருவனந்தபுரத்தில் நடந்தது. கூட்டத்தில், கரோனாவின் 2 ஆவது அலை தீவிரமடைந்து வருவதை கருத்தில் கொண்டு கட்டுப்பாடுகளை கடுமையாக்க முடிவு செய்யப்பட்டது.

மேலும், வெளிநாடுகள், அண்டை மாநிலங்களில் இருந்து வருவோரை 7 நாள்கள் தனிமைப்படுத்த ஏற்கெனவே உள்ள உத்தரவு தொடரும். முகக்கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறையினர் மூலம் தீவிர பரிசோதனை மேற்கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
மகாராட்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஊரடங்கா? - சுகாதாரத் துறைச் செயலாளர் பதில்
Image
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை மாற்றுவதா? அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
Image