சென்னையில் மூன்று சாலைகளுக்கு வைக்கப்பட்டிருந்த பெரியார், அண்ணா, காமராஜர் பெயர்களை மீண்டும் வைக்கவேண்டும்

 தலைமைச் செயலாளரிடம் தி.மு.. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம்!

சென்னை,ஏப்.16- சென்னையில் பெரியார்  .வெ.ரா. நெடுஞ்சாலை, அண்ணா சாலை, காமராசர் சாலை பெயர் மாற்றங் களை கண்டித்தும், மீண்டும் அப் பெயர் களை சூட்ட வலியுறுத்தியும் சென்னை, தலைமை செயலகத்தில் தலைமை செய லாளர் ராஜீவ் ரஞ்சனிடம் நேற்று (15.4.2021)திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்.எஸ்.பாரதி, பி.வில்சன், என்.ஆர்.இளங்கோ  கடிதம் அளித்தனர்.

பின்னர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர் களிடம் கூறியதாவது: 1969இல் அண்ணா மறைந்தவுடன், அன்றைய முதலமைச்சர் கலைஞர், சென்னை மாநகரத்தின் பிர தான சாலையாக இருந்த மவுண்ட் ரோடு என்று அழைக்கப்படும் சாலைக்கு அண்ணா சாலை என்று பெயர் சூட்டினார். சின்னமலையில் இருந்து செயின்ட் தாமஸ் வரை மவுண்ட் ரோடு என்றும் கலைஞர் பெயர் சூட்டினார். 1975ஆம் ஆண்டு காமராஜர் மறைந்தவுடன், அது வரை கடற்கரை சாலை என்று அழைக்கப்பட்டு வந்த சாலைக்கு காமராஜர் பெயரை  சூட்டினார். 1979ஆம் ஆண்டு பெரியார் நூற் றாண்டு விழா நடந்த நேரத்தில் அன்று முதலமைச்சராக இருந்த எம்ஜிஆர், பூந்தமல்லி அய்ரோடு என்று இருந்த சாலைக்கு பெரியார் .வெ.ரா. நெடுஞ்சாலை என்று பெயர் சூட்டினார்.

ஆனால் 4 நாட்களுக்கு முன்பாக நெடுஞ்சாலை துறை அறிவிப்பு பலகை யில் பெரியார் .வெ.ரா. நெடுஞ்சாலைக்கு கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு என்றும், அண்ணா சாலை, காமராஜர் சாலை பெயரை அகற்றுவதற்கும் முயற் சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிந்ததால் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போதும் தமிழக அரசு சார்பில் எந்த விளக்கமும் தரவில்லை. திமுக தலைவர் தளபதி மு..ஸ்டாலின் உடனடி யாக இதுகுறித்து அறிக்கை வெளியிட்டார். அதற்கு பிறகும் அரசு தரப்பில் இருந்து யார் செய்தது, எப்படி வந்தது என்று விளக்கம் தராததால் இன்று (15.4.2021) திமுக சார்பில் தலைவர் மு..ஸ்டாலின் ஒரு மனு கொடுக்க அனுப்பி வைத்துள்ளார். மூன்று சாலைகள் மட்டுமல்ல, கலைஞர் தான் மகாபலிபுரம் சாலைக்கு மாமல்லபுரம் சாலை என்று மாற்றினார். இந்த சாலையின் பெயரை மகாபலிபுரம் சாலை என மாற்றி யுள்ளனர். இந்த 4 சாலைகள் சென்னையை ஒட்டியுள்ள முக்கிய சாலைகள். மூன்று தலைவர்களின் பெயர் மறைக்கப்பட்டது ஏன்? யாரை திருப்திப்படுத்துவதற்காக செய் துள்ளார்கள் என்பது தெரிய வில்லை.

தமிழர்களின் உணர்வுகளை வெளிப் படுத்துவதற்காக திமுக சார்பில் தலைமை செயலாள ரிடம்  மனு கொடுத்துள்ளோம். அதில், ஏற்கெனவே மூன்று சாலை களுக்கு வைக்கப்பட்டிருந்த தமிழக தலைவர்களின் பெயர்களை மீண்டும் வைக்க வேண்டும் என்று வலியுறுத் தியுள்ளோம். தமிழக பாஜக தலை வர் முருகன் வரலாறு தெரியாமல் பேசுகிறார். அப்போது அவர் பிறந்துகூட இருக்க மாட்டார். அவருக்கு வேண்டுமானால் கண் ணாடி வாங்கி கொடுக்கிறேன்.

1969இல் இருந்து வரலாற்றை படித்து விட்டு வரட்டும். ஆவணத்தில் இருக் கிறது என்று தலைமைச் செயலாளரே ஒத்துக் கொண்டார்.

திராவிட இயக்க உணர்வு உள்ள உண்மையான தமிழர்களுக்கு தான் இதுபற்றி தெரியும் என்றார்.

Comments