இங்கிலாந்தில் ஊரடங்கில் தளர்வு: மக்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் - போரிஸ் ஜான்சன்

லண்டன், ஏப். 14 இங்கிலாந்தில் கரோனா தொற்றின் இரண் டாவது அலை தணிந்துள்ள நிலையில் 12.4.2021 அன்று முதல் பொதுமுடக்க தளர் வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இங்கிலாந்தில் உருமாறிய கரோனா தொற்று பரவியதை அடுத்து அங்கு கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை இந்த ஆண்டின் தொடக்கத்தில் வேகமாக அதிகரித்தது. இதையடுத்து, கடந்த ஜனவரி 6-ஆம் தேதி கடுமையான கட்டுப்பாடுகளு டன் கூடிய ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. அத்தியாவ சியப் பொருள்களுக்கான கடைகள் தவிர மற்றவை அடைக்கப்பட்டன.

மக்கள் அத்தியாவசியத் தேவையின்றி வீடுகளைவிட்டு வெளியே வரக் கூடாது என்று அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரமாக நடைபெற்றது. 3.2 கோடி பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 74 லட்சம் பேருக்கு இரண்டாவது தவணை தடுப் பூசியும் செலுத்தப் பட்டுள்ளது.

கரோனா தினசரி இறப்பு விகிதமும் வெகுவாகக் குறைந் துவிட்டது. இதையடுத்து, ஊரடங்கில் தளர்வு அம லுக்கு வந்துள்ளது.

அதன்படி, கடைகள், வாத்தக நிறுவனங்கள் முழு மையாக செயல்படத் தொடங் கியுள்ளன. இரவு நேர விடு திகள், மதுபான விடுதிகள், சிகை அலங்காரக் கடைகள், உணவு விடுதிகள், உடற்பயிற் சிக் கூடங்கள் என அனைத் தும் திறக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் அனைத்து இடங்களிலும் அரசு அறிவித்துள்ள கரோனா தடுப்பு விதிகளை முறையாகப் பின் பற்ற வேண்டும் என்று மக் களுக்கு அறிவுறுத்தப்பட்டுள் ளது.

இது தெர்டாபாக இங்கி லாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

 பொதுமுடக்க தளர்வு அறிவிப்புகள் பொதுமக்க ளுக்கும், வர்த்தகர்களுக்கும் நிம்மதி அளிக்கும் செய்தியாக இருக்கும். அதே நேரத்தில் அனைவரும் மிகவும் பொறுப் புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். கைகளை அடிக் கடி சுத்தப்படுத்துவது, முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளி ஆகியவற்றை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என பல்வேறு அறிவுரைகளை கூறியுள்ளார்.

Comments