கரோனா சிகிச்சைக்கான ரெம்டெசிவிர் மருந்து ஏற்றுமதிக்கு தடை

புதுடில்லி, ஏப்.12 கரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்கு அளிக்கப்படும் ரெம்டெசிவிர் மருந்து ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்து செலுத்த அதிக அளவில் மருந்து தேவைப்படுகிறது. கரோனா தொற்றைக் குணப்படுத்துவதில் ரெம்டெசிவிர் ஊசி மருந்து சிறப்பான வகையில் பயனளிக்கிறது. இதனால் உலகளவில் இந்த மருந்து அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான நாடுகளுக்கு இந்த மருந்து இந்தியாவில் இருந்து ஏற்றுமதி யாகிறது. தற்போது இந்தியாவில் அதிகமான தேவை இருப் பதால், கரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வரும்வரை 'ரெம்டெசிவிர்' ஊசிக்கு தேவையான மருந்துகள் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளது.

மேலும், 'ரெம்டெசிவிர்' மருந்து தயாரிக்கும் உள்நாட்டு தயாரிப்பு நிறுவனங்கள், அவர்கள் இருப்பு வைத்திருக்கும் மருந்துகள் மற்றும் விநியோகம் குறித்த விவரங்களை இணைய தளத்தில் வெளியிடவும், மருந்து கண்காணிப்பா ளர்கள், அதிகாரிகள் இருப்புகள் குறித்து சரிபார்க்கவும், பதுக்கல் குறித்து நடவடிக்கை எடுக்கவும் உத்தர விடப் பட்டுள்ளது.

 

ஜான்சன் அண்ட் ஜான்சனின் தடுப்பூசியை இந்தியாவில் பரிசோதிக்க பேச்சுவார்த்தை.....

புதுதில்லி, ஏப்.12 ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் ஒரு டோஸ் கரோனா தடுப்பூசியை இந்தியாவில் பரிசோதிக்க அரசுடன் அந்நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இந்த இரண்டு தடுப்பூசிகளும் இரண்டு தவணைகளாக வழங்கப்படக் கூடிய தடுப்பூசிகள். முதல் டோஸ் செலுத்தி, 4 வாரங்களுக்குப் பிறகு இரண்டாவது டோஸ் தடுப்பூசியைச் செலுத்த வேண்டும்.உலக அளவில் பயன்பாட்டில் உள்ள ஃபைஸர், மாடர்னா, ஸ்புட்னிக்-5 போன்ற பல தடுப்பூசிகளும் இரண்டு டோஸ் தடுப்பூசிகளே. இதில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ளது  ஒரு டோஸ் கரோனா தடுப்பூசி ஆகும். இந்தத் தடுப்பூசிக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அனுமதி வழங்கியுள்ளன.

இந்நிலையில் தங்களது தடுப்பூசியை இந்தியாவில் பரிசோதிப்பதற்காக  ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தரப்பில் கூறுகையில்,  இந்திய அரசுடன் எங்கள் தடுப்பூசியை மருத் துவப் பரிசோதனைக்கு உட்படுத்தும் முயற்சிக்கான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுளோம். உலகம் முழுவதும் பாதுகாப் பான மற்றும் பயனுள்ள கரோனா தடுப்பூசியைக் கொண்டு வருவதில் நாங்கள் முழுமையாக கவனம் செலுத்துகிறோம்என்று தெரிவித்துள்ளது.

 

36 புத்தகங்களை 2 மணி நேரத்தில் படித்து5 வயது சிறுமி உலக சாதனை

அபுதாபி,ஏப்.12- அபுதாபியில் வசித்து வரும் 5 வயதான இந்திய-அமெரிக்க சிறுமி 2 மணி நேரத்துக்குள் 36 புத்தகங்களை படித்து உலக சாதனை படைத்துள்ளார்.

சென்னையைச் சேர்ந்த பெற்றோ ருக்கு அமெரிக்காவில் பிறந்த இந்திய -அமெரிக்க சிறுமி கியாராகவுர். 5 வயதான இச்சிறுமி தற்போது பெற்றோருடன் அய்க்கிய அரபு அமீரகத்தில் வசித்து வருகிறார். இந்த சிறுவயதில் 36 புத்தகங்களை 1 மணி நேரம் 45 நிமிடங்களில் படித்து முடித்து உலக சாதனை செய்துள்ளார். இந்த சாதனைக்காக லண்டன் உலக சாதனை புத்தகத்திலும் ஆசிய சாதனைப் புத்தகத்திலும் கியாரா கவுர் இடம் பிடித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம்

13-ஆம் தேதியன்று 36 புத்தகங்களை இடைவிடாமல் 105 நிமி டங்களில் படித்ததற்காககுழந்தை மேதைஎன்று லண்டன் உலக சாதனை புத்தகம் கியாரா கவுரை பாராட்டி உள்ளது.

கியாரா கவுருக்கு புத்தகங்கள் படிப்பதில் இருந்த ஆர்வத்தை அபுதாபியில் அவரது ஆசிரியர்தான் முதலில் கவனித்து ஊக்கமளித்துள்ளார். கடந்த ஆண்டில் 200 புத்தகங் களுக்கு மேல் கியாராகவுர் படித்ததாகவும் புதிய புத்தகங்கள் மட்டுமின்றி ஏற்கெனவே படித்த புத்தகங்களை மீண்டும் படிக்க விரும்புவதாகவும் அவரதுபெற்றோர் தெரிவித்தனர். 'ஆலிஸ்இன் வொண்டர்லேண்ட், சிண்ட் ரெல்லா, லிட்டில் ரெட் ரைடிங் ஹூட் மற்றும் ஷூட்டிங் ஸ்டார் ஆகியவை கியாராவுக்கு பிடித்த சில புத்தகங்கள்.

கியாரா கவுர் கூறுகையில், ‘‘புத்தகங்கள் படிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நீங்கள் விரும்பும் இடத்துக்கு புத்த கங்களை கொண்டு செல்லலாம். அலைபேசிகளில் படிக்கும் போதோ, காட்சிப் பதிவுகளைப் பார்க்கும்போதோ இணைய இணைப்பு இல்லாவிட்டால் படிக்க முடியாது. புத்தகங்களை எங்கும் எப்போதும் படிக்கலாம்’’ என்றார்.

 

Comments