புதுச்சேரி கழகத் தோழர் கண்ணன் மறைவு

புதுச்சேரி, ஏப். 16- “சுயமரியாதை சுடரொளிமயிலாடுதுறை நா.வடிவேல் அவர்களின் மருமகனும், புதுச்சேரி நகராட்சி கழக செயலாளராக சிறப்பாக பணியாற்றியவரும். கழக மகளிரணி தோழர் பானுமதியின் துணைவரும், கழகத் தோழர்கள் வீரமணி கண்ணன், செல்லமணி கண்ணன் ஆகியோரின்  தந்தையும் புதுச்சேரி சட்டக்கல்லூரி ஆட்டோ சங்க செயலாளரும் சுதந்திர போராட்ட வீரர் மறைந்த தனபால் மகனுமான .கண்ணன் (வயது 65) உடல் நலிவுற்ற நிலையில் 15.4.2021 அன்று சிகிச்சை பலன் இன்றி மறைவுற்றார் என்பதை அறிந்து மிகவும் வருந்துகிறோம். மறைந்த தோழர் .கண்ணனுக்கு புதுச்சேரி மண்டல திராவிடர் கழகத்தின் சார்பில் வீரவணக்கத்தை செலுத்துகிறோம். கழகம் நடத்திய அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்டவர். இயக்கப் பிரச்சாரப் பணிகளுக்கு மிகவும் உறுதுணையாக இருந்த பெரியார் தொண்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments