அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கரோனா கால கதாநாயகர்கள் - கட்டுரைப் போட்டி

சென்னை, ஏப்.15 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, ‘கரோனா கால கதாநாயகர்கள்என்ற தலைப்பில், கட்டுரைப் போட்டி நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

முதல் பரிசாக கையடக்க கணினி வழங்கப்பட உள்ளது. பள்ளி கல்வி துறையின் கீழ் செயல்படும், ஒருங்கிணைந்த கல்வி திட்டமான, ‘சமக்ர சிக் ஷாதிட்டத்தில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, பல்வேறு போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, சுற்றுச்சூழல், ஊட்டச்சத்து, ஆரோக்கியம் குறித்த போட்டிகளும், ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, கட்டுரைப் போட்டியும் நடத்த, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.கரோனா கால கதாநாயகர்கள் என்ற தலைப்பில், மாணவர்கள் கட்டுரை எழுதி, அதை பள்ளி ஆசிரியர் அல்லது தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.

ஆசிரியர்களின், ‘வாட்ஸ் ஆப்எண்ணிலும் அனுப்பி வைக்கலாம்.இதில், முதல் பரிசாக, 7,000 ரூபாய் மதிப்புள்ள கையடக்கக் கணினியானடேப்லெட்வழங்கப்படும். இரண்டாம் பரிசாக, 4,000 ரூபாய் மதிப்பிலான அலைபேசி போன்; மூன்றாம் பரிசாக அறிவியல், ‘கால்குலேட்டர்வழங்க வேண்டும் என, ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

 

4 நாடுகளுக்கு அஞ்சல் சேவை நிறுத்தம் 


புதுடில்லி, ஏப்.15 நியூசி லாந்து உள்பட நான்கு நாடு களுக்கான பன்னாட்டு அஞ்சல் சேவையை அஞ்சல்துறை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

இந்திய அஞ்சல்துறை, பன்னாட்டு விரைவு அஞ்சல் மற்றும் பார்சல் சேவையை உலகம் முழுவதும் வழங்கி வருகிறது.

கரோனா தொற்று காரணமாக பன்னாட்டு விமான சேவை பாதிக்கப்பட்டு உள்ளதால், பல்வேறு நாடுகளுக்கு அஞ்சல்களை அனுப்புவதில் சிக்கல் நீடிக்கிறது.வைரஸ் பரவலால், நியூசிலாந்து, லக்சம்பர்க், மங்கோலியா, செர்பியா நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படவில்லை.

இதனால், இந்த நாடுகளுக்கான அனைத்து வகை அஞ்சல் முன்பதிவையும் அஞ்சல்துறை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த தடை தொடரும் என்றும்

அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.


Comments