மதங்களைக் கடந்த நட்பு இறப்பிலும் இணைபிரியாத நண்பர்கள்!

ஜெயங்கொண்டம், ஏப்.9- அரியலூர் அருகே இருவேறு மதத்தைச் சேர்ந்த இணைபிரி யாத நண்பர்கள்  ஒன்றாக இறந் தது பெரும் சோகத்தையும் ஆச் சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் ஜூபிலி ரோட்டில் பள்ளிவாசல் அருகே வசித்து வருபவர் மகாலிங்கம் (78). இவர் தெருவின் அருகே உள்ள காளி யம்மன் கோயிலில் பூசாரியாக உள்ளார். சிறிய தேநீர்கடை ஒன் றையும் நடத்தி வருகிறார். இவர் வீட்டின் எதிர் புறம் வசித்து வருபவர் ஜெயிலா புதின் (66). இவர் தெருவில் ஒரு 'ரைஸ்மில்' நடத்தி வருகிறார். இவர்கள் இருவரும் சுமார் 40 ஆண்டு களுக்கு மேலாக இணைபிரியாத நண்பர்களாக இருந்து வந்துள் ளனர்.

மகாலிங்கம் வீட்டில்  எந்த முக்கிய நிகழ்ச்சி நடந்தாலும் பண்டிகை காலங்களாக இருந் தாலும் ஜெயிலா புதின் கலந்து கொள்வார். அதேபோல் ஜெய்லா புதின் வீட்டில் முக்கிய நிகழ்வு களிலும் பண்டிகை காலங்களிலும் மகாலிங்கம் கலந்து கொண்டு உணவு பதார்த்தங்களை பரி மாறிக் கொள் வார்கள்.

இருவருமே 7.4.2021 அன்று உடல்நலக்குறைவால் ஜெயங் கொண்டம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளனர். அருகருகே இருந்த படுக்கையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் ஜெயிலா புதின் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந் தார். இதைக்கேட்டு அதிர்ச்சி யடைந்த மகாலிங்கம் அடுத்த 10 நிமிடத்திற்குள் உயிரிழந்தார்.

இதுகுறித்து இருவரின் மகன் களும் கூறுகையில்எங்களின் தாத்தா முதல் தலைமுறை. தந்தை இரண்டாம் தலைமுறை. இதை தொடர்ந்து நாங்களும் மூன்றா வது தலைமுறையாக இதேபோல் ஒற்றுமையாக உள்ளோம். உற்றார் உறவினர்போல் எல்லா நிகழ்வுகளிலும் ஒன்றிணைந்து மதங்களை கடந்து நாங்கள் நட் புடன் தொடர்வோம். எங்களின் தாத்தா, தந்தை ஆகியோரின் ஆசையும் அது தான்எனத் தெரிவித்தனர்.

Comments