கேரள ஆளுநர் ஆரிப் முகமதுகான் சபரிமலையில் இருமுடி கட்டி வந்து வழிபாடாம்

சபரிமலை, ஏப். 13- கேரள ஆளுநர் ஆரிப் முகமதுகான் பம்பை சென்று, அங்குள்ள கணபதி கோவிலில் வைத்து இருமுடி கட்டிக்கொண்டு - அங்கிருந்து நடை பயணமாக அய்யப்பன் சன்னிதானத்தின் வலிய நடைப்பந்தலுக்கு சென்றார்.

அங்கு அவரை திருவிதாங் கூர் தேவஸ்தான தலைவர் வாசு, உறுப்பினர் எஸ்.ரவி, ஆணையர் பி.எஸ். திருமேனி ஆகியோர் வரவேற்க அதைத் தொடர்ந்து, படி பூஜைக்கு பின், இரு முடி கட்டுடன் 18ஆம் படி வழியாக ஆளுநர் வழிபாடு செய்தாராம். ஆளு நருடன் அவரது இளைய மகன் கபீர் முகமது கானும் உடன் சென்றார்.

பின்னர் இரவு சபரிமலையிலுள்ள விருந்தினர் மாளி கைக்கு சென்று ஓய்வு எடுத் தார். நேற்று காலை மீண்டும் நெய்யபிஷேகம் நடத்தி, மாளிகப்புரம்கோவில் அருகில் சந்தன மரக் கன்று ஒன்றை நட்டு வைத்துத் தொடர்ந்து, ஆளுநர் ஆரிப் முகமது கான் நடைபயணமாக பம்பை வந்து அங்கிருந்து கார் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றாராம்!

Comments