‘இந்து' என்.ராம் சுட்டுரைப் பதிவில் கண்டனம்!

சென்னை,  ஏப். 4- தி.மு..வினரை குறி வைத்து நடத்தப்படும் வருமானவரிச்  சோதனை  என்பது  மத்திய  அரசுத்துறை களை தவறான முறையில் நடத்துவது மூர்க்கத்தனமானது, சட்ட  விரோதமானது  என்று  இந்து  குழுமத்தலைவர்  இந்து  என்.ராம்  கடும்  கண்டனம்  தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள சுட்டுரைப் பதிவு வருமாறு:-

தி.மு..வினரை குறிவைத்து நடத்தப்பட்ட வருமானவரிச் சோதனைக்கு  கடும்  கண்டனம்  தெரிவிக்கிறேன்.  அரசுத் துறைகளை மத்திய அரசு தவறான முறையில் நடத்துவது மிகவும் மூர்க்கத்தனமானது. அப்பட்டமான சட்டவிரோத நடவடிக்கை களை கண்டுகொள்ளாமல் இந்திய தேர்தல் ஆணையம் என்னசெய்கிறது?

இவ்வாறு அவர் தமது சுட்டுரைப் பதிவில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Comments