தொழில் வளர்ச்சிபற்றி காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

 * பெருகிவரும் மக்கள் தொகை, அதிக வேலைவாய்ப்புகளின் தேவை மற்றும் சமூகத்தின் அணுகுமுறை மாற்றம் போன்ற புதிய சவால்கள், தொழில் வளர்ச்சியின் அவசியத்தை உணர்த்துகின்றன. விவசாயம் சார்ந்த பொருளாதாரத்தை, தொழில் சார்ந்த பொருளாதாரமாக மாற்றியமைக்க வேண்டும். தொழில் வளர்ச்சிக்கு, 'முதலீடுகளின்' அவசியத்தை, இன்று அனைத்து மாநிலங்களும் உணர்ந்திருப்பதால், முதலீடுகளைப்பெற இன்று பல மாநிலங்கள் போட்டி போட்டுக்கொண்டு, தங்கள் மாநிலத்திற்கு முதலீடு களைப் பெற, உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முதலீட்டாளர்களுக்கு ஒவ்வொரு நாளும் பல சலுகைகளை அறிவித்துக் கொண்டிருக்கின்றன. மாநிலங் களுக்கிடையே இருக் கின்ற இந்த ஆரோக்கியமான போட்டியில், தமிழ்நாடு வெற்றி பெற்றால் தான் புதிய முதலீடுகளைப் பெற முடியும்.

* அதிமுக ஆட்சிக் காலத்தில், அரசின் தலைமைக்கும் பெருமுதலீட்டாளர்களுக்கும் இடையே உரையாடலும், சந்திப்புகளும் இல்லாமல் போனதால், கடந்த சில ஆண்டு களில் பலபெரும் முதலீடுகளைத் தமிழகம் இழந்துவிட்டது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு என்று பெரும் விளம்பரம் செய்து, கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவழிக்கப்பட்டதே தவிர, குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய எந்தப் பெருமுதலீடும் தமிழகத்திற்கு வரவில்லை.

* மத்தியில் டாக்டர் மன்மோகன்சிங் அவர்கள் பிரதமராகவும், மாநிலத்தில் டாக்டர் கலைஞர் அவர்கள் முதல்வராகவும் இருந்த காலம்தான் பெரும் முதலீடுகளைத் தமிழகம் பெற்ற காலம் என்பதை யாரும் மறுக்க முடியாது. 2006-2011இல் தமிழகத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி, (GDP) 19:64%. 2011 -- 2016இல் 18.52 சதவீதமாக குறைந்து 2016- - 2020இல் 9.10 சதவீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. வீழ்ந்து கிடக்கும் தமிழகத்தின் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்துவதுதான் நம் அரசின் முக்கியப் பணியாக இருக்கும்.

(காங்கிரஸ் தேர்தல் அறிக்கை, பக்கம் 11)

 ஆதரிப்பீர்! மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை...

Comments